உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 உள்ளம் கவர் கள்வன் நன்னிலையில் இருக்கு மட்டும். நன்றாக இருக்கும். உடம்பை விட்டு உயிர் புறப்படுவதற்கு முன்பு இந்தப் பொறிகளின் நுகர்ச்சி தெளிவாக இல்லாமல் கலங்கிவிடும்; புலன் ஐந்தையும் தெளிவாக உணராமல் ஐம்பொறிகளும் கலங்கும். இன்ன வழியே · 'நாம் இன்ன நிலையில் இருக்கிறோம் போகப் போகிறோம்' என்ற நினைவும் இராது. உடம்பிலே பலகாலம் இருந்த உயிர் இனி இவ்வுடலை விட்டு யாத்திரை செய்யப் போகிறது ஓர் ஊருக்குப் போக் முயல்பவர். தாங்கள் எந்த வழியிலே செல்ல வேண்டுமோ அதைத் தெளிவாகத்தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் உயிருக் குத் தான் இனிச் செல்லும் நெறி எது, எத்தகையது என்ற தெளிவு உண்டாவது இல்லை. பொறிகள் கலங்கியதோடு, செல்லும் நெறி இன்னதென்று தெரியாத மயக்கமும் இறக்கும் தருணத்தில் உயிருக்கு உண்டாகிறது, அறிவும் தடுமாறி அழிகிறது. உடம்பிலே வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் உள்ளன அவை அளவாக இருந்தால் உடல் நிலை இனி தாக இருக்கும். அளவு மாறினால் நோய் உண்டாகும். இறக்கும்போது கபம் மேலே வந்து தொண்டையை அடைக்கும். மரணத்தின் குறிகளில் ஐ (கபம்) மேல் உந்தி வருவதும் ஒன்று. பொறி கலங்கி நெறி மயங்கிக் கபம் கட்டின பிறகு இந்த உலகத்தில் உள்ள யாராலும் அந்த உயிரைக் காப்பாற்ற இயலாது. உடம்புக்கும் ருக்கும் உறவு அறும் சமயம் அது என்பது உறுதி. இத்தகைய சமயத்தில் உயிரைக் காப்பாற்றுபவன் ஒருவன்தான். நல்ல நெறியிலே உயிரைச் சேர்த்தி இறப்