இறுதித் துணை 63 பும் பிறப்பும் இல்லாத இன்ப வீட்டை அருளும் பெருமான் அவன். அவன்தான் இறுதியான துணை. உயிர் இறக்கும் தறுவாயில் நின்று கலங்கிச் சுழன்று வருந்தும்போது, 'அஞ்சாதே!" என்று சொல்லி அருள் பாலிக்கும் சிவபெருமான் திருவையாறு என்னும் தலத்தில் எழுந்தருளி யிருக்கிறான். புலன்ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல்என்று அருள்செய்வான் அமரும் கோயில். [ஐந்து வகைப் பொருளினிடத்தும் செல்லாமல் பொறிகள் கலங்கி நிற்க, செல்லும் நெறி இன்னதென்ற தெளிவின்றி மயங்கி அறிவானது அழிந்து போக, கபம் மேலே தள்ளி வந்து தொண்டையை அடைக்க, உயிர ரானது சுழலும் சமயம் உண்டாக அப்போது, நீ பயப்படாதே' என்று அருள் செய்யும் சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் திருக்கோயில்-திருவை யாறு என்று சொல்ல வருகிறார். பொறி புலன் ஐந்தும் கலங்கி, மயங்கி, அழிந்திட்டு, உந்தி என்பவற்றைக் கலங்க, மயங்க, அழிந்திட, உந்த என்று செய்வென் எச்சங்களாகக் கொள்ளவேண்டும். ஐ-கபம். மேல் என்றது தொண்டையைச் சுட்டியது. அலமருதல் - சுழலுதல். போது ஆக -சமயம் வரும்போது; மரண சமயத்தில் என்பது கருத்து. அலமருதல் உயிரின் செயல். உயிரென்பது பாட்டில் சொல்லா விட்டாலும், குறிப்பாற் புலப்பட்டது.] பலகாலம் ஒன்றுபட்டு வாழ்ந்த பொறி அறிவும் இறுதிக் காலத்தில் உயிருக்குப் பயன்படாமற் போவத னால், அவற்றின் சார்பை உறுதியாகக் கொள்ளாமல்,உயி ருக்கு என்றும் பற்றுக் கோடாக இருக்கும் இறைவனைப் பற்றினால், பொறியும் அறிவும் உடலும் கைவிடும்போது
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/72
Appearance