உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i சாத்திரம், இசை என்ற பல துறைகளில் தேவாரத்தை ஆராய்ந்து நல்ல முறையில் பதிப்பிக்கவேண்டும் என்ற விருப்பமும் அவர் களுக்கு இருந்தது. தமிழ் நாட்டின் தவக்குறைவால் அது நிறை வேறவில்லை. அவர்கள் கட்டளைப்படியே தேவாரத்தைச் சில சமபங்களில் படித்துவந்தபோது அவர்கள் பக்தி பரவசப்பட்டுக் கண்ணீர் துளும்ப மொழி தடுமாற இருந்த காட்சியை இன்று நினைத்தாலும் உள்ளம் உருகும். அப்போது பல நுட்பங்களை அவர்கள் சொன்னதுண்டு. திருவாவடுதுறையில் ஆதீன கர்த்த ராக இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களும், மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் அவ்வப்போது கூறிய நயங்களையும் எடுத்துச் சொல்வார்கள். இந்தச் சூழ்நிலையில் தமிழ் கற்றமையால் திருமுறைப் பாடல் களுக்கு விளக்கம் செய்யலாம் என்ற நினைவு ஒருபால் எழுந்தா லும், பலவகையறிவும் ஒருங்கு உடையவர்களே செய்ய அஞ்சும் இதனை நாம் செய்வதாவது என்ற அச்சமும் உடனே எழும். 'ஏதோ சில பாடல்களுக்குத்தானே விளக்கம் வரையப் போகிறோம்? எழுதிய அளவிலே பயன்படட்டுமே. எழுதவேண்டியவற்றை யெல்லாம் குறைவின்றி எழுதி நிறைவேற்றிவிட்டேன் என்று யாரரல்தான் சொல்லமுடியும்? நல்ல அறிவாளிகள் பின்னும் முயன்று சிறப்பாகச் செய்யட்டும். இப்போது நமக்குத் தெரிந்த அளவில் விளக்கம் கூறலாம்' என்ற எண்ணமே வென்றது. முருகன் திருவருளின் துணைகொண்டு எழுதத் தொடங்கினேன். இதில் முதல் திருமுறையில் உள்ள ஒன்பது பாடல்களுக்குரிய விளக்கத்தைக் காணலாம். 'சங்கநூற் காட்சிகள்' என்ற நூல் வரிசையில் பாட்டுகளுக்கு விளக்கம் எழுதிய முறையையே பெரும் பாலும் பின்பற்றி இந்த விளக்கத்தை எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் முதற் பாட்டுக்கு விளக்கம் நீண்டுவிட்டது. ஆனா லும் அந்தப் பாட்டு மிகமிக முக்கியமானது, தலைமையானது அல்லவா? தமிழுலகம் இந்த முயற்சியை உரமிட்டு வளர்த்து நிறைவேறச் செய்யும் என்றே நம்புகிறேன். மயிலாப்பூர் 10--5--53) கி.வா.ஜகந்நாதன்