பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருதலைக் கொள்ளி எறும்பு

87

எத்தனை முயற்சியில் ஈடுபட்டாலும் நாம் ஆன்மவிடுதலை என்ற குறிக்கோளை மறந்துவிடாமல் இருக்கவேண்டும். இல்லையானால் பற்றுக்களில் ஆழ்ந்து துன்புற நேரும். அப்போது கொள்ளித் தலையில் எறும்பு போன்ற நிலை நமக்கு வரும். அப்படி வந்த பிறகு அதை மாற்ற வேண்டுமானால் மனத்தைத் துயரம் இல்லாமல் வைக்க வேண்டும். அதற்குத் தக்க வழி இறைவனுடைய திருவருளை எண்ணி ஏங்குவதுதான். இறைவனை உறுதியாக உள்ளத்தில் நட்டுவிட்டால் வேறு வகையான பற்றுகள் அங்கே வந்து துன்பத்தைத் தாரா.

பற்று நீங்க வழி

நாம் இறைவனை அடைய வேண்டும். பற்றுக்கள் எல்லாம் அற்றால் இறைவனை அடைய முடியும்.

"அற்றது பற்றெனில் உற்றது வீடு"

என்று ஆழ்வார் சொல்வார்.பற்றோ அறுவதாக இல்லை. என்ன செய்வது? பற்றுக்கள் அறுவதற்கும் இறைவனைத் தியானம் பண்ணவேண்டுமென்று வள்ளுவர் சொல்கிறார். பற்று அறுவதற்கு இறைவனைப் பற்றிக் கொள்வது ஒன்று, பற்று அற்றபின் இறைவன் அருள் அநுபவம் உண்டாவது வேறு.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"

என்பது திருக்குறள். சமுத்திரத்தில் அலை ஓய்ந்த பிறகு நீராடுவோம் என்று இருந்தால் என்றைக்கும் நீராட முடியாது. அதுபோல் பற்று எல்லாவற்றையும் அறவே விட்டுவிட்டு இறைவனைப் பற்றிக் கொள்ளலாம் என்றால் அது நடவாத காரியம். கங்கையில் போய் நீராடுகிறவனுக்கு அழுக்கான வேட்டி இருக்கிறதே என்ற கவலை வேண்டுவ