பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருதலைக் கொள்ளி எறும்பு

89

எண்ணும்போது அதன் கடற்கரை நினைவுக்கு வருகிறது. எப்போதும் அலை மோதுகின்ற கடற்கரையில் செந்தில் ஆண்டவன் எழுந்தருளியிருக்கிறான். அந்த ஊருக்கே அலைவாய் என்று பெயர். அங்குள்ள கடற்கரை அழகியது. முத்துக்களை அலைகள் கொண்டுவந்து கொழிக்கின்றன. கோடிக்கணக்கான முத்தங்களை அங்கே கொண்டு வந்து சேர்க்கின்றன. திருச்செந்தூரில் எம்பெருமானுடைய சந்நிதானத்தில் நின்ற அருணகிரிநாதப் பெருமானுக்கு இப்படி ஒரு கற்பனை தோன்றுகிறது.

ஒரு கோடி முத்தம்

தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே!
வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே!

எம்பெருமான் வீரனாக வேலாயுதத்தைக் கையில் வைத்திருக்கிறான். சூரபன்மனைச் சங்காரம் செய்வதற்காகத் திருச்செந்தூரிலிருந்து வீரவாகு தேவரைத் தூது அனுப்பினான். அங்கே படைவீடு கொண்டான். அங்கே இருந்துதான் யுத்தத்திற்குப் புறப்பட்டான். ஆகவே அவன் அங்கே போர் வீரனாக எழுந்தருளியிருந்தான். பின்பு வெற்றி யபிஷேகமும் அங்கே நடை பெற்றது. ஜயத்தைக் கொண்டாடியமையால் ஜயந்தி என்ற பெயர் அதற்கு உண்டாயிற்று. முருகன் வீரனாக, சேவகனாக அங்கே எழுந்தருளியிருக்கிறான்.

தெள்ளிக் கொழிக்கும் கடல்செந்தில் மேவிய சேவகனே!

அலைகள் முருகப்பெருமானுக்குக் கோடிக்கணக்காக முத்தங்களைக் கொண்டு தருகின்றனவாம். கடற்கரையில் அலை மோதும்போது கரை குலைவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே அருணகிரிநாதப் பெருமான் அதைச் சொல்லவில்லை. அலைகளால் நலம் விளைகிறது என்று சொல்கிறார். அலைகள் கோடிக்கணக்கான