பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்த்துணை

95

களுக்கு இந்த உடம்பிலிருந்து பிரியும் மரணம் விடுதலைக்கு வாசலாக உதவுவது. அது மரணம் ஆகாது. அவ்வாறின்றி உலகத்தில் பற்றுக்களில் ஆழ்ந்து இந்த உடம்பை விடுவதற்கு மிகவும் வருந்தி இறந்து போகிறவர்கள் வேறு பிறவியை எடுக்கிறார்கள். அவர்களுடைய இறப்புத்தான் மரணம் ஆகும். இந்த வேறுபாட்டைப் பற்றியும் முன்பு பல முறை சிந்தித்திருக்கிறோம்.

அருணகிரி நாதர் மரணத்தைக் கண்டு அஞ்சாதவர். அவருடைய உறுதிப்பாட்டைப் பலபடியாகக் கந்தர் அலங்காரத்தில் சொல்வதிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம். "எமனுக்கு நான் அஞ்சமாட்டேன்" என்று சொல்வார். "எமனே, நான் உனக்கு அஞ்சமாட்டேன்" என்று வேறு வகையில் சொல்வார். "எமனே, என் முன்னாலே வா; உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று அறைகூவும் முறையிலும் சொல்வார். இப்படிச் சொல்கின்றவருடைய உள்ளம் எவ்வளவு உறுதியானது! பயத்தைப் போக்க வேண்டுமானால் நாமும் தைரியத்தோடு இருக்க வேண்டும்.

அஞ்சாமைப் பயிற்சி

ன்னுடைய சிறு வயதில் ஒரு பெரியவர் எனக்கு நல்ல உபதேசம் செய்து வந்தார். அவர் பய உணர்ச்சியைப் பற்றிச் சில யோசனைகளை எனக்குச் சொன்னார். "பயம் தோன்றும்போதெல்லாம் அந்தப் பயத்திற்கு மூலகாரணமான பொருளை நீ தொலைத்துவிடுவதாகப் பாவனை பண்ணிக்கொள். அப்போது பயம் போய்விடும்" என்று சொன்னார். அந்த உபதேசத்தைக் கேட்ட காலத்தில் எனக்குப் பதினைந்து பிராயம் இருக்கும். பூச்சாண்டி, பேய், பிசாசு என்று கேட்டுக் கேட்டுப் பயம் கொள்ளும் பருவம் அது. அந்தப் பெரியவர் செய்த உபதேசத்தினால் எனக்கு ஒரு துணிவு எழுந்தது. அவர்