பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

உள்ளம் குளிர்ந்தது

சொல்கிற முறையைப் பரீட்சை பண்ணிப் பார்க்கலாம் என்று எண்ணினேன். பிசாசு வருவதாகப் பயம் வந்தால் கையில் ஒரு வாள் இருப்பதாக எண்ணி, அந்த வாளை எடுத்து அதை வெட்டுவதாக நான் பாவனை செய்வேன். இந்தப் பழக்கத்தினால் தைரியம் எனக்குச் சிறிது உண்டாயிற்று.

எங்கள் ஊரில் ஆற்றங்கரையில் மயானம் இருக்கிறது, அங்கே இரண்டு மூன்று பனைமரங்கள் நிற்கும். ஊருக்குப் புறம்பான இடம் அது. என்னுடைய தைரியத்தைச் சோதிப்பதற்காகப் பாதி ராத்திரியில் எழுந்து ஆற்றங்கரைக்குச் செல்வேன். முதலில் பயம் குடலைக் குழப்பும். பின்பு அந்தப் பனைமரங்களைப் பார்க்கும்போது பிசாசுகள் நெடிய உருவம் எடுத்து வந்து நிற்பன போலத் தோன்றும். "உன்னைத் தொலைத்து விடுகிறேன் பார்" என்று வெளிப்படையாக உரக்கச் சொல்லிக் கொண்டு, கையில் கத்தி இருப்பது போல எண்ணி, "இதோ வெட்டி விட்டேன்" என்று சொல்வேன். இப்படிப் பயிற்சி பண்ணினதால் என்னுடைய மனசுக்குத் தைரியம் மிகுதியாயிற்று.

அருணகிரியார் செய்த உபகாரம்

பெரியவர்கள் காலனால் வருகின்ற அச்சத்தைப் போக்குவதற்குக் காலகாலனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னதோடு, காலனால் எந்தப் பயமும் உண்டாகாது என்பதை வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய பாடல்களை நாம் பல முறை பாராயணம் பண்ணியும், மனனம் செய்தும் சொல்லி வந்தால் நமக்கு மரண. பயம் ஒருவாறு நீங்கும்.புலி அடிப்பதைவிடக் கிலி அடிப்பது அதிகம் என்பது பழமொழி. யமன் வருவதற்கு முன்னாலேயே அவனை எண்ணிச் சாவதில் பயன் இல்லை. இறைவன்