பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

உள்ளம் குளிர்ந்தது

விஷயத்தில் அவர் சம்பந்தப்பட்டால் அவர் தம்முடைய உச்சுவாச நிச்சுவாசத்தை நிதானமாகக் கவனிப்பார். ஒவ்வொரு தடவையும் வெளியில் மூச்சு விடும்போது கெடுதலான பகுதிகளை வெளியே தள்ளிவிடுவதாகப் பாவனை செய்வார்; அப்படியே நல்லவற்றை உள்ளே இழுத்துக் கொள்வதாக எண்ணுவார். 'நான் சங்கோசத்தை வெளியே தள்ளிவிடுகிறேன்; நம்பிக்கையை உள்ளே வாங்குகிறேன்' என்று சொல்லிக் கொள்வார்; 'பயங்கொள்ளித் தனத்தைத் தள்ளிவிடுகிறேன்; உறுதியை உள்வாங்குகிறேன். தோல்வியைத் தொலைத்து விடுகிறேன்; வெற்றியை உட்கொள்கிறேன்' என்று தாமே சொல்லிக் கொள்வார்.

"அவர் உள் இழுத்ததும் வெளியில் விட்டதும் வெறும் மூச்சுக் காற்றுத்தான். ஆனால் அவருடைய அடி மனம், மேல் மனம் எண்ணிய இந்த எண்ணங்களை ஏற்றுக்கொண்டு அவர் விரும்பிய பண்புகளை மலரச் செய்தது" என்று எழுதுகிறார்.

நம்முடைய பெரியவர்கள் நமக்கு உறுதிப்பாடு உண்டாவதற்காகப் பாடிய பாடல்கள் இத்தகைய பயிற்சியைச் செய்ய உதவுகின்றன. இந்தக் காலத்து மன விஞ்ஞானிகள் மனத்தின் இயல்புகளை எவ்வளவு நுட்பமாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்களோ அதைவிட நுட்பமாக அநுபூதிமான்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் உண்மைகளைப் புதிது புதிதாகக் கண்டு பிடித்துச் சொல்லும்போது. நம் முன்னோர்கள் கூறிய கருத்துக்களுக்கு அவை விளக்கங்களாக இருப்பதைக் காண்கிறோம்.

காலன்

ந்தர் அலங்காரத்தில் நூறு பாடல்கள் அமைந்த பெருமாலைக்குக் குஞ்சம் போல ஆறு பாடல்கள் இருப்பதைப் பார்த்தோம். அந்த ஆறு பாடல்களில் கடைசிப்