பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

113

போதுதான் ஆயுதங்களைப் பிடிப்பது வழக்கம். அவன் ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தாலும் நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் அவனோ சண்டைக்கு வருபவனைப் போலத்தான் வருகிறான். கந்தர் அலங்கார நூலைக் கற்றவர்கள் அருணகிரிநாத சுவாமிகளின் அற்புதமான பாட்டின் சிறப்பினால் எமனுக்கும் அஞ்சமாட்டார்கள்.

யமன் சண்டைக்கு அஞ்சார்.

இம்மையின் இறுதியில் உண்டாகும் அச்சம் இது.

நரகத் துன்பம்

டுத்தபடி மறுமையில் உண்டாகும் அச்சத்தைச் சொல்ல வருகிறார். இம்மை, மறுமை, வீடு என்று மூன்றைச் சொல்வார்கள். இம்மை என்பது இகவாழ்வு. மறுமை என்பது சொர்க்க நரக வாழ்வு, வீடு என்பது எல்லா வற்றையும் கடந்த, என்றைக்கும் மாறாத இன்ப வாழ்வு. மறுமையாகிய சொர்க்கமும் நரகமும் முறையே புண்ணியத்தாலும் பாவத்தினாலும் கிடைப்பன. சொர்க்கமாக இருந்தால் நமக்கு அச்சம் இல்லை. ஆனால் நரகமாயின் அச்சம் உண்டாகும். இந்த உடம்பை விட்டுச் சென்றால் எந்த நரகத்திற்குப் போவோமோ என்ற கவலை அலங்காரம் படிப்பவர்களுக்கு இல்லையாம். நரகத்தைக் குழி என்று சொல்வார்கள். அது தனக்குள் வீழ்ந்த ஆருயிர்களை அமிழ்த்தித் துன்புறுத்துவதனால் அப்படிச் சொன்னார்கள். அது ஒரே இருளாக இருக்கும். நரகத்திற்கு இருள் என்றும் ஒரு பெயர் உண்டு. சொர்க்கமோ ஒளி மயமாக இருக்கும். சொர்க்க போகத்தை நுகர்பவர்கள் தேவர்கள். சொர்க்க லோகத்துக் குடிமக்களாகிய அவர்கள் ஒளிபடைத்த திருமேனியை உடையவர்கள். தேவர் என்ற சொல்லுக்கே ஒளிபடைத்தவர் என்பது