பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

உள்ளம் குளிர்ந்தது

அநுபவத்தில் உணருகிறோம். ஒரு காரணமும் இல்லாமல் தங்களுடைய சொந்த நலனை எண்ணி அரசர்கள் பிற அரசர்களோடு போரிட்டுக் கொண்ட காலம் அது. எந்தச் சமயத்தில் எந்த மன்னன் எந்த மன்னனை அடிப்பானோ, எப்போது போர் வந்துவிடுமோ என்று மக்கள் அஞ்சி இருந்தார்கள். மன்னருக்கும் மன்னருக்கும் ஒற்றுமை வளரவில்லை. அவர்களுக்குள் எப்போதும் காழ்ப்பும், பொறாமையும் வளர்ந்து கொண்டே வந்தன. அதனால் அவர்கள் துன்பப்பட்டதோடு அல்லாமல் அவர்களுடைய ஆட்சிக்குக் கீழ் அடங்கிய மக்களும் துன்பப்படும்படி செய்தார்கள். வாழ்க்கை முழுவதுமே இத்தகைய பயத்தை வைத்துக் கொண்டு மக்கள் வாழ்ந்தார்கள். ஆகவே, குடிமக்களுடைய உள்ளத்தில் இருந்த அச்சங்களுள் பெரிய அச்சம் வேந்தருக்கு அஞ்சும் அச்சம். அத்தகைய அச்சத்தைக் கந்தர் அலங்காரம் படிக்கிறவர்கள் போக்கிவிடுவார்களாம். முதலில் இந்தப் பயனைச் சொல்கிறார் அருணகிரியார். 'தமக்குள்ளே கோபித்துப் பொருகின்ற வேந்தர்களுக்கும் அஞ்சமாட்டார்கள்' என்று தொடங்குகிறார்.

சலம் காணும் வேந்தர் தமக்கும் அஞ்சார்.

இறைவனுடைய திருவருளை நம்பி அவனைத் துதித்து வாழ்கின்றவர்களுக்கு உள்ளம் சாந்தி பெற்றிருக்கும் ஆதலின் அவர்களுக்கு இத்தகைய அச்சம் இராது.

மரண பயம்

னி அடுத்தபடி, இம்மையின் முடிவாகிய நிலைக்கு வருகிறார். இந்த வாழ்வின் முடிவில்தான் நமக்கு மரணம் வருகிறது. அதைப் பற்றித்தான் சென்ற பாட்டில் பார்த்தோம். கையில் ஆயுதங்களை ஏந்தியபடி எருமை மாட்டு வாகனத்தில் ஏறிக்கொண்டு நம்மோடு சண்டையிட வருபவனைப் போல எமன் வருகிறான். சண்டையிடும்