பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

115

ஆதி தெய்விகம், ஆதி பௌதிகம் என்று சொல்வார்கள். தாபத்திரயம் என்று சொல்லுவதும் அவையே. பிற உயிர்களால் வரும் துன்பம் ஆதியாத்மிகம். உயிர் இல்லாத பொருள்களால் வருவது ஆதி பெளதிகம். இயற்கையாக வருவது ஆதி தெய்விகம். இந்தத் தாபத்திரயங்கள் இந்த உலக வாழ்வில் நம்மை அணுகா. முருகப்பெருமானுடைய திருவருள் கிடைக்குமானால் தாபத்திரயம் இல்லாத இகலோக வாழ்வு நமக்கு உண்டாகும். அந்த அருளைப் பெறுவதற்குரிய சாவியாக இருப்பது கந்தர் அலங்காரம். இந்த உடம்போடு இருக்கும்போது முக்கியமாக நமக்கு வேண்டியவைகள் செல்வம், நோய் அற்ற வாழ்வு.

"மதிவேண்டும், நின்கருணை நிதிவேண்டும், நோயற்ற
வாழ்வினால் வாழவேண்டும்"

என்று இராமலிங்க வள்ளலார் கந்தகோட்டத்து முருகனை வேண்டுவார். அருணகிரி நாதப்பெருமான் திருப்புகழில்,

"தருணமிதையாமிகுத்த கனமதுற நீள்கவுக்கிய
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு"

வேண்டும் என்று சொல்கிறார். மனிதன் பெறுகின்ற பேறுகளில் நோய் அற்ற வாழ்வே தலை சிறந்தது. ஆகையினால் நோயினால் வருகின்ற அச்சம் சுந்தர் அலங்காரத்தைப் பாராயணம் செய்கின்றவர்களுக்கு வராது என்று அடுத்தபடி சொல்கிறார்.

துட்ட நோய் அணுகார்.

நோயில் எளிதில் தீருகின்ற நோய் உண்டு; தீராத வியாதியும் உண்டு; அசாத்திய ரோகம் என்று சொல்வன அவை. அவற்றையே, துட்ட நோய்' என்று சொன்னார்.

விலங்கின் அச்சம்.

பிற மனிதர்களால் வரும் துன்பம் இராது என்று சொல்வதற்கு வேந்தரால் வரும் துன்பம் இராது என்று