பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

119

முருகப்பெருமானுடைய பெருமையைக் காட்டி அவனுடைய கருணைக்கு ஆளாகவேண்டு மென்ற எண்ணம் உண்டாகும்படி சில பாடல்கள் சொல்கின்றன. எந்தப் பாட்டைப் படித்தாலும் அந்தப் பாட்டில் நடுமணியாக ஒரு கருத்து இருப்பதைக் காணலாம். அந்தக் கருத்தையே நம்முடைய வாழ்நாளில் குறிக்கோளாகக் கொண்டு ஓழுகி வந்தோமானால் அதுகாரணமாக மற்றப் பண்புகளும் தாமே வந்து அமையும். ஆகையால் ஒன்று கற்றாலும் நன்கு கற்க வேண்டுமென்ற கருத்தோடு இப்படிச் சொல்கிறார்.

ஒரு கவி கற்றாலே போதும், மற்றவை வேண்டாம் என்பது இதன் பொருள் அல்ல. மிகப் பசித்தவன் தனக்குச் சோறு வேண்டுமென்று கேட்கிறான். "ஐயா, ஒரு கவளம் தாருங்கள்" என்று சொல்கிறான். அளவு குறிப்பிட்டு அவன் சொன்னாலும் ஒரு கவளம் மட்டும் போதும் என்பது அவன் கருத்து அன்று. வயிறு நிறையச் சோறு போடுகிறேன் என்றால் அவன் மறுப்பானா? அப்படி ஒரு பாட்டுக்கே இத்தனை பயன் இருக்கும்போது நூறு பாடல்களையும் படிக்கிறவர்கள் பெரும் பயன் அடைவார்கள் என்பது சொல்லாமலே விளங்கும்.

முடிந்த பயன்

ந்தப் பெரும் பயன் என்ன? இந்தப் பாடலில் இம்மை வாழ்வில் குறைகள் நீங்கும் என்றும், எம பயம் நீங்கும் என்றும், மறுமை வாழ்வில் நரகம் அணுகாது என்றும் சொன்னார். ஆனால் அதற்குமேற்பட்ட பெரும் பயனும் ஒன்று உண்டு. அதுதான் வீடு அடைதல். இந்தப் பாட்டில் அந்தப் பயனைச் சொல்லவில்லை.

இந்தப் பாட்டின் அமைப்புத் தனி முறையில் அமைந்திருக்கிறது. பயன் என்பது இது கிடைக்கும் என்று சொல்வது. ஆனால் இவை வாரா என்று அருணகிரியார்