பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் குளிர்ந்தது

ந்தர் அலங்காரம் நூறு பாடல்களை உடையது என்று அதன் நூற்பயன் சொல்கிறது. ஆனாலும் மேலே ஆறு பாடல்கள் கந்தர் அலங்காரப் பிரதிகளில் சேர்ந்தே எழுதப்பட்டிருக்கின்றன. அந்தப் பாடல்களின் சொல்லமைப்பு, பொருள் அமைப்பு முதலியவற்றைப் பார்த்தால் அவைகளும் அருணகிரியாரின் திருவாக்கு என்று தோன்றுகிறது. கந்தர் அலங்காரத்தோடு சேர்த்து அந்தப் பாடல்களையும் பாராயணம் பண்ணுவது தமிழ் நாட்டில் வழக்கமாக இருக்கிறது. இதுவரையில் நாம் கந்தர் அலங்காரம் நூறு பாடல்களைப் பார்த்தோம். இனிமேல், பொங்கி வழிந்து ததும்பும் ஆறு பாடல்களையும் பார்த்து விட்டு, பிறகு கடைசியில் உள்ள நூற்பயனைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

உண்முக தரிசனம்

இப்போது பார்க்கப் போகிற பாட்டு ஒரு வகையில் நமக்கு இடையறாது வழிகாட்டும் பாட்டு. இறைவனுடைய திருவருளில் ஈடுபடுகிற முயற்சி நம்மிடத்தில் இருக்க வேண்டும். எத்தனைதான் நாம் உடம்பினால் வணங்கி, வாயினால் பேசினாலும், மனம் இறைவனுடைய வசம் ஆகாதவரையில் அநுபவம் என்பது துளியும் கிடைக்காது.