பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராப்பகல் அற்ற இடம்

29

பொருள் எப்படி இருந்தாலும் அதன் உண்மையான உருவத்தைத் தெரிந்துகொள்ள முடியாமல் செய்துவிடுகிறது. அறியாமையை இருள் என்று சொல்வது வழக்கு. இருட்டில் இருப்பவர்களுக்குத் தம் முன் உள்ள பொருள்களின் நிலை தெரியாதது போல அறியாமை உடையவர்களுக்குப் பொருள்களின் உண்மையான நிலை தெரியாது. புறத்தில் உள்ள இருளைப்போக்கி, பொருள்களின் வண்ணம் வடிவம் முதலியவற்றைத் தெரிந்துகொள்ளக் கருவிகளாக இருப்பவை சூரியன், சந்திரன், அக்கினியாகிய மூன்றும். உள்ளே இருக்கிற இருளைப் போக்குவதற்கு இறைவனுடைய அருள் தான் வன்மையுடையது.

மூன்று மனநிலை

நாம் விழித்துக் கொண்டிருக்கிறோம்; அல்லது தூங்குகிறோம். தூங்கும்போது இரண்டு நிலை நமக்கு வருகின்றன. ஒன்று சொப்பன நிலை; மற்றொன்று எல்லாவற்றையும் மறந்து தூங்கும் தூக்கநிலை. விழித்துக் கொண்டிருப்பது தான் ஜாக்கிரம். சொப்பனம் காண்பது கனவுநிலை அல்லது சொப்பனாவஸ்தை. நன்றாக அயர்ந்து தூங்குவது சுஷுப்தியவஸ்தை. இந்த மூன்று நிலைகளிலும் நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். நமக்குப் பகல் நேரத்தில் விழித்துக் கொண்டிருக்கத் தெரியும். இரவு நேரத்தில் தூங்கத் தெரியும். தூக்கத்தில் சொப்பனம் காணவும் தெரியும்.

இராத்திரி பகல் ஆக ஆகிய இரண்டுக்கும் நடுவில் சாயங்காலம் இருக்கிறது. அதுபோல் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் நடுவில் கனவு நிலை இருக்கிறது. கனவிலே காண்பது முற்றும் உண்மை அன்று. ஆனால் உண்மையாக நடந்தால் எவ்விதம் இன்ப துன்ப உணர்ச்சி உண்டாகுமோ அதுபோன்ற அநுபவத்தை அப்போதைக்குப் பெறுகிறோம். புலி வருவது