பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராப்பகல் அற்ற இடம்

39



கடவுள்மெச்சும்

பராக்ரம வேல, நிருத சங்கார, பயங்கரனே!

ண்டவனைத் தரிசனம் பண்ணப் போகிறார் அருணகிரியார். அங்கே ஒரு தனிக் கோயிலில் முருகன் எழுந்தருளியிருக்கிருன். அவர் கோயிலுக்குள் நுழையும்போது உள்ளே இருந்து பேச்சுக் குரல் வெளியே கேட்கிறது. அது அவர் காதிலும் விழுகிறது. நமக்கு முன்னே யாரோ ஒருவர் வந்து எம்பெருமானுடன் பேசிக் கொண்டிருக்கிறார் போல இருக்கிறது என்று சற்றுத் தயங்கித் தயங்கி நிற்கிறார். உள்ளே குரல் கேட்கிறது. "எம்பெருமானே, உலகத்தினர் விஷயம் தெரியாமல் உலகத்தை எல்லாம் காப்பாற்றுகிறவன் நான் என்று என்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிருர்கள். ஆதிமூலமே என்று கதறிய யானைக்கு நான் உயிர்ப்பிச்சை அளித்தேன் என்று அந்த உலகத்தார் சொல்கிறார்கள். அந்த யானை என்னை நினைந்து அழுதது. என் பெருமையைவிடப் பெரியது உன் பெருமை என்று எனக்குத் தெரியாதா? இன்று மூன்று உலகமும் நிலைபெற்று நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறதென்றால் அது உன் பராக்கிரமச் செயலால் அல்லவா? நானும், பிரம்மாவும், மற்றவர்களும் சூரபன்மனுக்கு வரம் கொடுத்து அவனைப் பலசாலியாக்கினோம். பின்பு அவன், தீட்டிய கட்டையிலேயே கூர் பார்க்கிறது போல, எங்களையே எதிர்த்தான். இந்திரன் நடுநடுங்கிப் போனன். எங்களால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. நீ உன்னுடைய பெரு வீரத்தினல் சூரபன்மனைச் சங்காரம் செய்து மீட்டும் அமராவதியை அமராவதியாக்கினாய். இமையவர் நாட்டினில் கிறைகுடி ஏற்றி உன் வெற்றிக் கொடியை நாட்டினாய். இந்தப் பெருமையை நான் அறியமாட்டேனா?" என்று சொல்லிக் கொண்டிருக்கிருர், அவர் சொல்கிற வார்த்தையிலிருந்து உள்ளே இருக்கிறவர்