பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

உள்ளம் குளிர்ந்தது

கடவுள் மெச்சும்

பராக்ரம வேல !

படியின்மேற் படி

ங்கே அருணகிரியார் திருமாவின் புகழை இவ்வளவு சொல்கிறாரே; ஏன்? ஒருவனை லட்சாதிபதி என்று சொல்கிறோம். அதனால் அவன் புகழ் தெரிகிறது. அவன் பெருமையை முதலில் சொல்லிவிட்டு, "அவனைவிட இவன் பணக்காரன்" என்று இவனைச் சுட்டினால் பின்னும் இவன் பெருமை வீட்டு விளங்கும். ஒரு பொருளின் உயர்வை மிகவும் எடுத்துச் சொல்லி, அதைவிட உயர்ந்தது இது என்றால் பின்னதன் உயர்வைச் சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையான உத்தி. கம்பர் இந்த உத்தியைப் பல விடங்களில் ஆளுகிறார். கோசலையின் பெருமையைக் குகன் தெரிந்துகொள்ள வேண்டுமென்று பரதன் பேசுகிறான்.'உலகம் பெரியது. அதை உண்டாக்கிய பிரமன் அதைவிடப் பெரியவன். அந்தப் பிரமனைத் தந்த திருமால் அவனைவிடப் பெரியவன். அவனைப் பெற்ற கோசலை பின்னும் பெரியவள்' என்று அடுக்கடுக்காகச் சொல்கிறான்.

"கோக்கள் வைகும்

முற்றத்தான் முதல்தெவி, மூவுலகு மீன்றானை
முன்னின் றானைப்
பெற்றத்தாற் பெறுஞ்செல்வம் யான் பிறத்த
லால்துறந்த பெரியாள்."

பல பெரிய பொருள்களை முதலில் காட்டி அவற்றுக்கெல்லாம் மேலான பெருமை உடையவள் என்று பரதன் குறிப்பிக்கிறான். இவ்வாறு படியின் மேல் படியாக உயர்த்தி வைத்துக் காட்டுவது ஓர் அழகு. அந்த வகையில் அருணகிரியார் திருமாலின் பெருமையைக் கூறி