பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

உள்ளம் குளிர்ந்தது

கனவுக் காட்சி

மக்கோ உள்ளத்தில் கூடச் சரியானபடி காட்சி கிடைக்கிறதில்லை. உள்ளத்தில் நினைந்து பழகினால் அது கனவில் மிகத் தெளிவாகக் காணும். ஆசார்ய சுவாமிகள் ஓரிடத்தில், "ஆண்டவனிடத்தில் பக்தி இருக்கிறதா என்பதைச் சோதித்துக் கொள்ளச் சொப்பனம் இருக்கிறது. சொப்பனத்தில் இறைவன் திருவுருவம் தோன்றினால் நம் முடைய பக்தி சிறந்தது என்று தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லியிருக்கிறார்கள். நிறையப் பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள். "எங்கே திருடன் வந்துவிடுவானோ?" என்று பகல் எல்லாம் பயந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கனவில் திருடன் வருவான். எப்போதும் நினைவில் எது மிகுதியாக இருக்கிறதோ அது கனவில் வரும். அதுபோலவே எது இல்லை என்ற குறையுண்டோ அதுவும் கனவில் வரும். அதிகமாகப் பழகுகின்ற பொருளும் வரும்; எது கிடைக்கவில்லை என்று நினைந்து ஏங்கீ இருக்கிறோமோ அதுவும் வரும்.

இந்த இரண்டு வகையினால் ஆண்டவனுடைய சொருபத்தை நாம் கனவில் காணலாம். அடுத்தடுத்து அவன் திருக்கோயிலுக்குச் சென்று அவன் திருவுருவ தரிசனம் செய்திருக்க வேண்டும். அல்லது, "எம்பெருமானே! உன்னுடைய திருவருள் கிடைக்க வில்லையே" என்று ஏங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவனுடைய காட்சி கனவில் தோன்றும். இவ்வாறு தோன்றுவது ஒரு வகை அநுபவம்.

இதை இராமலிங்க சுவாமிகள் ஒரு பாட்டில் சுட்டுகிறார்;

"பண்ணேறும் மொழிஅடியார் பரவி ஏத்தும்
பாதமலர் அழகினை இப் பாவி பார்க்கின்
கண்ணேறு படும்என்றே கனவி லேனும்
காட்டென்றால் காட்டுகிலாய்; கருணை ஈதோ!"