பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணூரக் காணும் காட்சி

53



இதில் இராமலிங்க சுவாமிகள், ஏங்கினால் கனவில் காணலாம் என்ற உண்மையைப் புலப்படுத்துகிறார். நன்றாகக் கண்டு, நன்றாக உள்ளத்தில் வைத்துக்கனவிலும் கண்டு, பின்பு நினைக்கும்போது அதனைப் புறத்திலும் கண்டு ஆனந்தம் அடைவது சிறந்த பக்தர்களுடைய இயற்கை. மூன்றாவது நிலைதான் புறக் காட்சி. அதை இந்தப் பாட்டில் சொல்கிறார் அருணகிரியார்.

லிங்கமும் வேலும்

ன்னைக் கண்டு மனசில் கொள்ளவேண்டுமென்று கருதியே சிவலிங்கம் முதலிய எளிய உருவத்தை ஆண்டவன் ஏற்றருளியீருக்கிறான். இறைவன் திருக்கரத்தில் மானும் மழுவும், திருமுடியில் பிறையும் கங்கையும் கொண்ட திருக்கோலத்தைக் கண்ட பிறகு மனசில் நினைத்துப்பார்த்தால் எளிதில் அந்தக் கோலம் பதியாது.அப்படி யின்றிச் சிவலிங்கத்தையே பார்த்தால் அது எளிதில் பதியும். அதனைச் சோதிமயமாகப் பார்க்கிற நிலை வந்துவிட் டால் பின்னும் சிறப்பாக இருக்கும். சிவலிங்கம் அருவுருவம் என்று சொல்வார்கள். அதாவது முழு உருவமும் அன்று; முழு அருவமும் அன்று. இரண்டு தன்மையும் ஒருங்கே கொண்டது என்று பொருள். கால்,கண் முதலிய இல்லாமல் இருத்தலால் முழு உருவம் என்பதற்கில்லை; கண்ணால் காணும்படி இருப்பதனால் முழு அருவம் என்று சொல்வதற் கும் இல்லை. ஆகையால் இரண்டுக்கும் நடுவில் அருவுருவம் என்று சொல்கிறார்கள். அந்த லிங்கம் மிக தியானத்தில் வைப்பதற்குரியது.

அப்படி முருகப்பெருமானை வழிபடுகிறவர்களுக்குத் தியானத்திற்கு எளிதாக இருக்கிற பொருள் ஒன்று உண்டு. அவன் திருக்கரத்தில் மின்வெட்டைப் போலத் தோற்றும் வேல் இருக்கிறது. திருவடியிலிருந்து திரு