பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

உள்ளம் குளிர்ந்தது

'என் மனத்திற்குள்ளே தெளிவுபெறுகின்ற ஞானம் விளங்குகிறது. புறவெளியில் உன் திருமேனி தோன்றுவதற்குக் காரணம் என்ன என்று பார்த்தேன்; என் உள்ளம் தெளிந்திருக்கிறது. இந்தத் தெளிவு ஞானத்தால் வந்தது. என் கருத்துத் தெளியும்படி ஞானம் உண்டாகச் செய்த உன் திருவருளை என்ன என்று சொல்வேன்!' இவ்வாறு அபிராமிபட்டர் அதிசயப்படுகிறார். ஒன்பது கோணங்களில் எழுந்தருளி நலம் செய்கின்ற பெருமாட்டியைப் பார்த்து அவர் பாடுகிறார்.

அருணகிரி நாத சுவாமிகளும், அபிராமிபட்டரும் அநுபூதியில் ஒரே நிலையில் இருந்தவர்கள்; உள்ளம் தெளிவு பெற்று, அந்த உள்ளத்தில் இறைவனுடைய திருவுருவத்தைக் கண்டு, பின்பு முறுகிய பேரன்பினால் உள்ளே கண்டதை வெளியில் காணப் பயின்றவர்கள்.

பிடித்த படமும் காட்டும் படமும்

ரிடத்தில் ஒருவன் இருந்து படம் பிடிக்கிறான். அப்படிப் பிடித்த படத்தைத் தனியாக வேறு ஓர் இருட்டறையில் கொண்டு வந்து கழுவுகிறான். கழுவின பிறகு படம் உருவாகிறது. அதன் பின்பு திரை கட்டி அந்தப் படத்தை வைத்துக் காட்டினால் திரையில் அந்த உருவம் தெரிகிறது. சினிமாத் திரையில் தெரிகிற உருவம், முன்னாலே தோன்றிய உருவத்தை எடுத்த பட வரிசையிலிருந்து விளைந்த விளைவு. நடித்த காட்சியை முதலில் படம் பிடிப்பது, அதன் பின்பு பிடித்த படத்தைக் கழுவித் தெளிவாக்குவது, பின்பு அந்தப் படத்திலிருந்து திரையில் காட்சியைத் தோற்றச் செய்வது ஆக மூன்று நிலையைச் சினிமாவில் பார்க்கிறோம். அவ்வாறே கோயிலிலே ஆண்டவனைக் காண்பது, பின்பு உள்ளத்தில் தெளிவாகக் காண்பது, பின்பு புறத்தில் காண்பது என்ற மூன்று