பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

உள்ளம் குளிர்ந்தது

போக்கும். ஆகையால் மரண பயத்திற்குப் பாதுகாப்பான ஆண்டவனுடைய பாதங்களை அருள் பதங்கள் என்று சொன்னார்.

"சாகாது எனையே சரணங் களிலே
காகா நமனார் கலகம் செயும்காள்"

என்று அநுபூதியில் பாடுகிறார்.

திருத்தணி

ப்போது நாம் பார்க்கும் விண்ணப்பத்தைத் திருத்தணீயில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைப் பார்த்துச் சொல்கிறார் அருணகிரியார். அந்தத் திருத்தணி மாமலையில் என்ன வளம் இருக்கிறது என்பதையும் சொல்கிறார். அங்கே நீர் நிலைகள் பல உண்டு. வாபீ கூப தடாகங்கள் என்று சேர்த்துச் சொல்வார்கள். பல வாவிகள் அங்கே இருக்கின்றன. திருத்தணிக்குக் காவித்திருமலை என்று ஒரு பெயர். அங்குள்ள ஒரு வாவியில் காவி மலர் தினந்தோறும் பூக்குமாம். காவி மலருக்குக் (கல்லாரம் என்று ஒரு பெயர். காவி மலர் பூப்பதனால் கல்லார மலை என்று அதற்கு ஒரு பெயர் உண்டு. அதனால் அங்கே இருக்கிற பெருமானுக்குச் செங்கல்வராயன் என்று பெயர். செங்கல்வம் என்பது செங்கழுநீர்ப்பூவுக்கு ஒரு பெயர். அத்தகைய வாவி சிறந்து விளங்குவது திருத்தணி. அதோடு நில வளமும் பொருந்திய ஊர் ஆதலால் வாவிக்கு அருகில் விசாலமான வயல்கள் ஊரைச் சுற்றி இருக்கின்றன.


ஆண்டவன் எழுந்தருளியிருக்கும் இடமாகையால் பல பெரியார்கள் வந்து அங்கே தங்குவார்கள். நல்ல எண்ணங்கள் அலை அலையாக எங்கும் குழும்படியாக அவர்கள் தங்கியிருப்பார்கள். எண்ண அலைகள் சூழ்ந்த குளிர்ந்த சூழ்நிலை குளிர்ச்சியை உண்டாக்கும். கோபம்