பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயபக்தி

71

வேண்டும். அந்தப் பக்திக்கு மூலமாய் இருப்பது, யமன் வந்து உயிரைக் கொள்ளை கொள்ளுவானே!' என்ற பயம். உயிருக்கு மோசம் வருமே என்ற பயம் அழுத்தமாக உண்டாகி, அதன் பயனாக இறைவனுடைய திருவடிகளைச் சேவிக்க வேண்டும். "அப்படிச் சேவிப்பது ஒன்று உண்டு என்பதையே நான் நினைக்கவில்லை" என்று அருணகிரியார் சொல்கிறார்.

முன்னை வினை

தற்குக் காரணம் என்ன? நல்லதை நினைப்பதற்கும் ஒரு தவம் வேண்டும். பூர்வ புண்ணியம் இருந்தால்தான் நல்ல எண்ணங்கள் நமக்கு எழும்.

"தவமும் தவமுடையார்க் காகும்"

என்று திருவள்ளுவர் கூறுவர். இறைவனிடத்தில் அன்பு செய்வதற்குக் காரணமாக இருக்கும் பயம் நமக்கு உண்டாக வேண்டுமானால் அது பலகாலப் பழக்கத்தினால் வரவேண்டும். முன் செய்த பாவம் அத்தகைய பழக்கம் உண்டாகாமல் தடுக்கும். எனவே, "உன்னிடத்தில் பக்தி செய்து நலம் பெறுவதற்குத் தடையாக இருக்கிற வினை, ஆவிக்கு மோசம் வரும் என்பதை அறியாமல் இருக்கும்படி செய்கிறது. அந்த வினையை நீ தீர்த்து அருளவேண்டும்" என்று முருகனை வேண்டுகிறார்.

ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றிலேன்; வினைதீர்த்தருளாய்!

உயிருக்கு மோசம் என்பது யமனால் வரும் மரணம். அதனைத் தீர்ப்பது இறைவனுடைய பாதம். அது அருள் வடிவமாக இருக்கின்றது. இறைவனுடைய அருள் மருளைப் போக்கும். ஆவிக்கு வருகின்ற துன்பத்தைப்