பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயபக்தி

75

செய்த பாவந்தான் நான் இப்படி இருப்பதற்குக் காரணம். அந்தப் பாவத்தை நீ தீர்த்து அருளவேண்டும்" என்று இந்தப் பாட்டில் நமக்காக அருண்கிரியார் வேண்டிக் கொள்கிறார்.

ஆவிக்கு மோசம் வருமாறு

அறிந்து உன் அருட்பதங்கள்

சேவிக்க என்று நினைக்கின்றி

லேன்வினை தீர்த்தருளாய்;

வாவித் தடவயல் சூழும்

திருத்தணி மாமலைவாழ்

சேவல் கொடிஉடை யானே,

அமரர் சிகாமணியே!


[உயிருக்கு நஷ்டம் வரும் வண்ணத்தை உணர்ந்து உன் அருள்வடிவான திருவடியைப் பணிய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை; இதற்குக் காரணமான பாவத்தைப் போக்கி அருள்புரிவாய்; பொய்கையோடு சேர்ந்த விசாலமான வயல்கள் சுற்றியுள்ள திருத்தணிகை யென்னும் பெருமையையுடைய மலையில் வாழும், சேவற்கொடியை உடைய பெருமானே, தேவர்களுக்குச் சிகாமணி போன்றவனே!

வருமாறு - வரும் ஆற்றை, சேவிக்க என்று - நான் சேவிப்பேனாக என்று; சேவிக்க: வியங்கோள். வினை - பாவம். வாவித் தடவயல் - வாவியோடு கூடிய தடவயல். சிகாமணி - முடியின் மேல் அணியும் மணி; என்றது சென்னியால் வத்திக்கும் உயர்வுடையாய் என்றபடி.]

மரணத்திலே பயமும் அது காரணமாக அதைப் போக்கிக்கொள்ள முருகனிடத்தில் ஆழ்ந்த பக்தியும் உண்டாக வேண்டும் என்பது கருத்து.