பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

பெட்டியோடு அவரும் புறப்படலானார்; மெலிந்திருந்த தாயை அரிதிற்பிரிந்து சென்றார்.

அவரது ஊரிலிருந்து ஹேம்புடன் ஐந்நூறு கல் தூரம். வழி முழுதும் அப்பொழுது புகை வண்டி இல்லை. தொலையிற்பாதி குதிரை வண்டியிற் சென்றாக வேண்டும். ஊரினை வீட்டுச் சிறிது தொலை சென்றது. தான் ஹேம்புடன் சேர்வதற்கு வேண்டிய அளவு பிரயாணக் காசு கையில் இல்லை என்பது புக்கருக்குப் புலப்பட்டது. சிறிது தூரம் குதிரை வண்டிக்குக் காசு கொடுத்து அதில் ஏறிச் சென்ற பிறகு, இன்னுஞ் சிறிது தூரம் நடந்தும், அதன் பின் வண்டிகளில் தம்மை ஏற்றிச் செல்லுமாறு உரியாரை இரந்தும், முடிவில் ரிச்சு மாண்டு (Richmond) என்னும் ஊரை அடைந்தார். ஆனால், ஹேம்புடனுக்கு இன்னும் எண்பத்திரண்டு கல் தூரம் இருந்தது. களைத்துத் தவித்துப் பசித்து ரிச்சுமாண்டை அவர் அடைந்த நேரமோ, நள்ளிரவு. அதுவோ, ஒரு பெருநகரம். அவரோ, பெருநகரத்துக்குப்புதியவர். கையிற் காசில்லாத அவர்க்குத் தங்குதற்கு, இடமளிப்பார் அந்நகரில் இல்லை. கடைத்தெரு வழியே அவர் சென்ற பொழுது அவர் கண்முன் தென்பட்ட தின்பண்டங்களைக் கண்டு அவர் மனம் வாடியது. தமக்குப் பின்னால் வரப் போவதையெல்லாம் வாக்களித்தாவது அவற்றுட் சிலவற்றைப் பெறலாகாதா என்ற எண்-