பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹேம்புடன் பள்ளியிற்கல்வி

37

ஹேம்புடனில் இண்டாம் ஆண்டு தொடங்கிற்று. புக்கர் இவ்வாண்டிலும் சென்ற ஆண்டிற் செய்து வந்த வேலையைப் பெற்று, அதனைச் செய்து, உண்டிக்கு வழி பண்ணிக்கொண்டார். இப்பொழுதும் அவர் நன்றாகப் படித்தார். இப்பொழுது அவர் அங்குச் சிறப்பாகக் கண்டது யாதெனின், ஆசிரியரின் தன்னலமற்ற தன்மையேயாகும். தமக்குப் பாடுபடுவதிலும் பிறர்க்குப் பாடுபடுவதால் வரும் இன்பம் பெரிது என்பதை அறிந்தார். வேத புத்தகத்தில் நல்ல பயிற்சி பெற்றார். அப் புத்தகத்தை இலக்கியக் கண்ணுடனும் பார்க்கக் கற்பிக்கப்பட்டார். சொற்பொழிவுகள் இயற்றுதலிற் பயிற்றப்பட்டார். ஹேம்புடனில் உள்ள சொற்போர்ச் சங்கத்திற் சனிக்கிழமைதோறும் ஏதேனும் பொருள் பற்றி வாதம் நிகழும். சனிக்கிழமை ஒன்றுந் தவிராது புக்கர் அங்குச் சேர்வார். இனி, இருபது உறுப்பினர்களைச் சேர்த்துத் தனியாக மற்றொரு சொற்போர்க் கழகத்தையும் அவர் நிறுவினார். அதன்கண் நாடோறும் இரவில் இருபது நிமிடம் வாதமாதல் பிரசங்கமாதல் நிகழும். அவற்றில் எல்லாம் அவர் கலந்துகொள்வார்.

இரண்டாம் ஆண்டு முடிந்தது. விடுமுறையும் வந்தது. இம்முறை, வாஷிங்குடனுக்கு ஊர் செல்ல இயன்றது. அவர் தாயுஞ் சகோதரர் ஜானும் இயன்ற