பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்டம் பெற்றவர்

47

பெறற்கரிய அந்த வெற்றியையும் அவர் விரும்பினாரில்லை. அவரது இனத்தாருக்கு அக்காலத்தில் அடிப்படையான கல்வியும், கைத்தொழிலும், சொத்துரிமையும், இன்றியமையாச் சிறப்பினவாய் வேண்டப்பட்டன. இவற்றிற்காகப் பாடு படுவதே அநிலையில் தக்கது எனக் கருதித் தம் நலம் விடுத்துப் பொது நலம் நாடத் தொடங்கினார் புக்கர். -

இங்ஙனம் நிகழும் வேளையில், புக்கருக்கு உவகையும் வியப்பும் அளிக்கும் ஒரு கடிதம் கிடைத்தது. அது ஆர்ம்ஸ்டிராங்கு அவர்களிடமிருந்து வந்தது. ஹேம்புடனுக்கு வந்து அவ்வாண்டின் பட்டதாரிகளுக்கு நல்லுரை பகர வேண்டும் என்று அம்முடங்கல் முழங்கிற்று. ஆறு ஆண்டுகளுக்குமுன் துடைப்பத் தேர்வில் தேர்ச்சியடைந்த பின் சேர்த்துக்கொள்ளப் பட்ட அக்கல்லூரியிலேதான் இப்பொழுது புக்கர் இத்தகைய சிறப்பினையடைவது என்றால் வியப்பில்லாமல் இருப்பதன்றொ வியப்பாகும் வெற்றி பெறுகிற ஆற்றல் என்னும் பொருள் பற்றிச் சிறந்ததொரு விரிவுரையினைப் புக்கர் எழுதிக்கொண்டார். ஹேம்புடனுக்கு இம்முறை செல்லுங்கால் முழுவதும் புகை வண்டியிலே செல்ல அவருக்கு இயன்றது. பழைய பள்ளிக்கூடத்தில் அவரைச் சிறப்போடு வரவேற்றார்கள். அவர் ஆங்குச் செய்த சொற்பொழிவை எல்லோரும் போற்றி-