பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. இன்னும் அத்தொண்டே

போர்ட்டர் மண்டபம் கட்டி முடிந்ததும், சில மாணவியருக்கு அதன் மாடத்தின்கண்ணே இருக்க இடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் மாணவியர் பலர் பலராய் வருவாராயினர். மாணவர்களும் மேன்மேல் வரவே, மாணவர்கள் உண்ண இடமும், மாணவியர் தங்க இடமும் இன்னும் பெரியனவாக வேண்டியிருந்தன. பெரிய கட்டடத்திற்குத் திட்டம் போட்டுவிட்டார் புக்கர். கையிற் காசில்லை. கட்டடத்திற்கு ' அலபாமா ஹால்' என்ற பெயர் வேறு இட்டுவிட்டார் இந்நிலையில், பிள்ளை பெறுமுன் பெயர் இட்டாய்விட்டது! அலபாமா மண்டலத்தே அத்தொண்டு செய்யப்படுவதால், அப்பெயரான். அம்மண்டலத்தைப் பெருமைப்படுத்த எண்ணினார் புக்கர். தொடக்கத்திலிருந்தே மாணவரிடமும் ஊராரிடமும் புக்கர் சொல்லி வந்தனவெல்லாம், கலாசாலை தம்முடையதென்றோ வேறு சிலருடையதென்றே எண்ணக்கூடாதென்பதும், மாணவர் எல்லார்க்கும் ஊரார் எல்லார்க்கும் அதில் உரிமையுண்டென்பதும் ஆம். ஆதலின், அப்பெயர் பொருத்தம் ஆனதே.

மாணவர்கள் முன் போலவே அடித்தளக் கல்லிற்-