பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

காக இடம் பறிக்கலாயினர். டஸ்கிகீயிலும் அதன் சுற்றிலுமாகப் போய் ஒலிவியா அம்மையார் மீண்டும் உதவியைப் பெற்று வருவாராயினர். கிடைக்கக் கூடிய உதவியெல்லாம் கிடைத்துவிட்ட பிற்பாடும் போதிய அளவு பொருள் சேரவில்லை,, திட்டம் போட்டிருப்பது பதினாயிரம் டாலருக்கு அன்றோ? இதனைக் கேள்வியுற்ற பெரியார் ஆர்ம்ஸ்டிராங்கு புக்கரைக் கூடுமானால் உடனே ஹேம்புடனுக்கு வருமாறும், வந்து தம்முடன் வடக்கே ஒரு மாதம் சுற்றுமாறும் எழுதியிருந்தார். அவரது நோக்கம் வடதேசத்தாருக்குப் புக்கரை அறி முகப்படுத்தி வைப்பதாகும். புக்கருஞ்சென்றார். வட தேசத்தே இருவரும் நாடோறுஞ்சென்று ஆங்காங்கே டஸ்கிக் கலாசாலையை விளம்பரப்படுத்திப் பேசியதால் வந்த வந்த ஆதரவைப் பெறுவாராயினர். புக்கருக்கு யாதொரு செலவும் இல்லை. செலவெல்லாம் ஹேம் புடனைச் சேர்ந்தது. வருவாயனைத்தும் டஸ்கிகீயைச் சேர்ந்தது. இந்த ஏற்பாட்டைச் செய்தவர் விரிந்து பரந்த நோக்கத்தை உடைய விழுமியார் ஆர்ம்ஸ்டிராங்கே ஆவர். இவ்வூரென்றும் அவ்வூரென்றும் எழும் வேற்றுமை அவர்பால் இல்லை. அவ்விரு ஊரிலும் ஒரு வர்க்கத்தாரின் பொருட்டே இத்துணை உழைப்பும் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற ஒற்றுமை உணர்ச்சியே அவரிடம் குடிகொண்டிருந்தது.