பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இன்னும் அத்தொண்டே

77

சாலை தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆனவுடன், ஓர் இராப்பள்ளிக்கூடம் அமைக்க வேண்டியது இன்றியமையாதது எனத் தோற்றிற்று. பல பெண்டிரும் ஆடவரும் பள்ளிக்குத் தகுதியுடையவராய் இருந்தும், காசு பணமில்லாது கலங்கித் தவித்தவராய்க் கல்வி கற்கத் தமக்குள்ள ஆர்வத்தை வேளியிட்டு விண்ணப்பஞ் செய்தார்கள். புக்கர் முதலானவர்கள் சூழ்ந்தெண்ணி, அவர்களுக்கென ஓர் இராப்பள்ளிக்கூடம் அமைத்தார்கள். ஹேம்புடனிற்போலவே இங்கும் பகலிற் பத்து மணி நேரம் மாணவர் கைத்தொழில் செய்து மாலையில் இரண்டு மணி நேரம் புத்தகப் படிப்புப் பெற்றனர். ஆடவர் கற்சூளையிலும், பெண்டிர் சலவை நிலையத்திலும் வேலை செய்ய வேண்டியவராய் இருந்தனர். இருந்தும், இரண்டு மணி படிப்பதையே அவர் பொருளாகக் கருதினர். அவரது வேலையின் கூலி சேமிக்கப்பட்டு, அவர்கள் இரண்டோர் ஆண்டில் பகற்பள்ளியிற் சேர்வதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டு வந்தது. அவரெல்லாம் பின்னர்ப் பகற்பள்ளியிற் சேர்ந்து சிறந்த முறையில் தேறினார்கள். அம்மாணவரும் மற்றவரைப் போலவே சமயக் கல்வியும் பெறுவாராயினர்.

இத்துணை அரிய தொண்டினை ஆற்றி வந்த புக்கர் வாஷிங்குடன், முதல் மனைவியை மணந்து இரண்டு