பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின்பிற்பகுதி

93

லான- புத்தகங்களை அவர் புகை வண்டிகளிலேயே படித்தார் எனவும் அறிகின்றோம்.

அவருக்கு ஓய்வு போன்றதும், பொழுது போக்காய். உள்ளதும் அவரது தோட்ட வேலையே. நிலத்தை அகழ்வதிலும், விதைகளை விதைப்பதிலும், பயிர்களைச் சுற்றிக் கொத்துவதிலும் அவர் நாடோறும் அரை மணியாவது கழிக்க விரும்புவர். இயற்கையைக் கண்டு மகிழ்ந்து அதிலிருந்து ஊக்கமும் உரனும் பெறமாட்டாத மக்களுக்காக அவர் இரங்குவதுண்டு. காற்பந்து கைப்பந்து முதலான விளையாட்டுக்களை அவர் வேட்டதில்லை. சீட்டாட்டத்தில் அவர் கறுப்புச் சிவப்பு அறியார். தம்முடைய புதல்வர் இருவரொடும் எப்பொழு தாவது கோலியாட்டம் மாத்திரம் ஆடுவார். எல்லா வற்றிலும் உயர்ந்த வகையில் அவருக்கு ஓய்வும், பொழுது போக்கும் அளித்தது அவர் இல்லத்தாருடன் அமர்ந்து அளவாளவும் மாலை நேரமே.

அவருடைய மனைவி மக்களெல்லாம் மாண்புடையவரே. மூன்றாம் மனைவியாராகிய மார்கரெட்டு அம்மையார் பிஸ்கு(Fisk)ப் பல்கலைக் கழகத்திற் பட்டம் பெற்றவர். திருமணத்திற்குப் பல்லாண்டு முன்பே டஸ்கிகீயில் ஆசிரியையாய் வந்து அமர்ந்து திருமணக் காலத்திற் பிரின்ஸிபாலாய் இருந்தவர்: புக்கருக்குக்