பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 ♦ அறிஞர் அண்ணா



அதனையும் அக்கறையுடன் கவனித்துக் கொள்வர். ஸ்தாபனங்களிலும் இது போலத்தான், தொழிற் ஸ்தாபனங்களின் ஐக்கியமும் பலமும் கெடாதிருக்க வேண்டுமானால், ஜன்னல் கம்பியையும் ஜாக்கிரதையுடன் கவனிக்கும் மாளிகைக்காரர் போல, ஸ்தாபனத்தின் சகல உறுப்பினரையும் கவனித்து, கட்டுக்கோப்பு கெடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையைக் கவனியாததால் தொழிலாளர் ஸ்தாபனங்களிலே, ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டுச் சிதறி விட்டதுண்டு. பெரிய மரங்களை மாளிகை மண்டபத்துக்குத் தூண்களாக அமைத்து விட்டால் மட்டும் போதாது. மிக மிகச் சாதாரண செல், மரத்திலே சிறு துளைகளிலே புகுந்து கொள்ளாதபடியும் பார்த்துக் கொள்ளவேண்டும். செல் அரிக்க ஆரம்பித்தால், செம்மரமும் சரி, எம்மரமும் சரி, கெடும்--அதனுடன் ஸ்தாபனமும் கெடும். தாங்கும் சக்தி, தாக்கும் சக்தி இரண்டும் ஒரு சேர ஸ்தாபனத்துக்குத் தேவை. அதற்கேற்ற வகையிலே அந்த அமைப்பு இருக்க வேண்டும். இருக்க வேண்டுமானால், இருவகை சக்திகளைத் திரட்டவும், திரட்டியதை உபயோகிக்கவும், ஏற்ற தகுதி படைத்தவர்கள் ஸ்தாபனத்திலே இருக்க வேண்டும்; ஒருவர் இருப்பது மற்றவருக்கு வலிவு என்ற எண்ணம் குன்றாது, குறையாது இருக்க வேண்டும். அந்த எண்ணத்தாலே ஸ்தாபனத்தின் ஐக்கியத்தைக் குன்றாது காப்பாற்ற முடியும். கொள்கைகள் நிலைமைகளால் மாற்ற மடையும்போது, ஸ்தாபன ஐக்கியத்துக்கு ஆபத்து நேரிடக் கூடும். அது போலவே ஸ்தாபனத்தில் நடைமுறையில், யார் எதைச் செய்வது, எது எப்படி செய்யப்பட வேண்டும், என்ற பிரச்னைகள் கிளப்பி, அதன் பயனாக ஸ்தாபன ஐக்கியம் கெடுவதுண்டு. ஆனால் அடிப்படை பலமாக் இருந்தால் மாளிகைக் கேடாதிருப்பது போல், கொள்கை பலமிருந்தால் ஸ்தாபனம் கெடாது. ஆனால் அதற்காக ஸ்தாபனத்தின் ஐக்கியம் கெட்டுவிடத்தக்க நிலைமைகள்