பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 91



ஏற்படும்போது அக்கறையற்று இருந்துவிடவும் கூடாது. தொழிலாளர் ஸ்தாபனம், மனக் குறையின் மீதும், அதனால் ஏற்படக்கூடிய ஆத்திரத்தின் மீதும் ஏற்பட்டு விடுவதுண்டு. சரியான அடிப்படை அல்ல; வாழ்வதற்கு உழைக்கிறோம் -- ஆனால், வாழ்வு இல்லை. உழைக்காது வாழ்கிறார்கள்--அந்த வாழ்வுக்கு -- தங்கு தடை இல்லை -- "வாழ்வோம் அனைவரும் வாழ உழைப்போம். ஒருவர் உழைப்பின் மீது மற்றொருவரின் வாழ்வு அமைக்கப்படும் அநீதியை ஒழிப்போம்" என்ற அடிப்படைகளின் மீது கட்டப்பட்டுள்ள தொழில் ஸ்தாபனங்கள், அந்த உன்னதமான இலட்சியம் ஈடேற வேண்டும், என்ற பெரு நோக்கத்தை உறுதுணையாகக் கொண்டு, ஸ்தாபனத்தின் நடைமுறை வேலையில், உறுப்பினர்களுக்குள் உள்ளக் கொதிப்போ, கசப்போ ஏற்படாத வகையிலும், இன்னார் செய்கின்ற காரியம் இன்னாருக்குச் சரி என்று படவில்லை என்ற நிலை ஏற்படாத வகையிலும், ஸ்தாபனத்தின் வேலைகளில் அவரவர்களுக்கு அவரவர் ஆற்றலுக்கேற்ற, ஆனால் ஸ்தாபனத்தின் மூலக்கொள்கைக்கு ஊறு நேரிடாத முறையில், ஸ்தாபன ஐக்கியம் கெடாது உழைத்தால் பலனும் நிச்சயம் விளையும், ஸ்தாபனத்தின் பலம் வளரும்போது ஏற்படும் அல்லல் அதிகம், ஸ்தாபனம் வளரும் போது இருக்கும் ஸ்தாபன ஐக்கியம், ஸ்தாபனம் நன்றாக வளர்ந்த பிறகு, ஓரளவு ஆபத்துக்குள் சிக்கிவிடக் கூடும்--வளர்ந்துள்ள பலத்தைக் கொண்டு என்ன செய்வது? எவ்விதம் அதைச் செய்வது? யாரைக் கொண்டு அதைச் செய்வது? எப்போது செய்வது? என்ற பிரச்சினைகள் ஸ்தாபனம் வளர்ந்த பிறகு ஏற்படும். ஐக்கியத்துக்கு ஆபத்து எதனால் வரக்கூடும், அந்த நெருக்கடியான நேரத்தி லெல்லாம் ஸ்தாபனத்தின் மூலக் கருத்துக்கே முதலிடம் தரப்பட வேண்டும்; அப்போதுதான் ஸ்தாபனம் சிதையாமல் இருக்கும். ஸ்தாபன ஐக்கியம் ஒருமுறை பாடுப்பட்டுச் சாதித்துவிட்டு, அதைக் கண்டு சந்தோஷப்-