பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 105 பொதுநலம் பாட்டாளி ஆட்சியிலேதான் மலர முடியும்! அந்த ஆட்சியின் வெற்றியினால் மட்டுமே, உழைப்பு ஊரழிக்கும் காரியமாகாது தடுக்கவும், விஞ்ஞானம் விபரீதத்தைப் பொழியாது நன்மைகள் பயக்கக்கூடியதாக அமையும் வழி பிறக்கும்! பொருளாதார ஏற்றத் தாழ்வையொட்டித் தொழிலாளியின் வாழ்வு இருக்கிறது; அதைப்போல், அரசியலையொட்டியும் தொழிலாளி இருக்கிறான்! அரசியலை நீக்கித் தொழிற்சங்கத்தைப் பார்க்க முடியாது; தொழிற் சங்கத்தை நீக்கி அரசியலைப் பார்க்க முடியாது! உலக அரங்கில் மிக முக்கியமானதாகவும் பலருடைய மனதை மருட்டக் கூடியதாகவும் தொழிலாளர் பிரச்சினை வளர்ந்துவிட்டது! நீதியை - நேர்மையை சமுதாயத்தில் அமைதியை சுபிட்சத்தை விரும்பும் எவரும், தொழிலாளர் பிரச்சினையை அலட்சிப் படுத்தியோ அல்லது அடக்கு முறைகளால் அழித்துவிடக் கூடுமென்றோ எண்ண முடியாது! - உழைப்பாளர் கூட்டம் ஏங்கும் நிலை ஏன் ? இங்கே வந்திருக்கும் தாய்மார்களையும் அவர்கள் பெற்றெடுத்த செல்வங்களையும் உற்றுப் பார்க்கிறேன்; அந்தத் தாய்மார்களின் உடலில் சிறு குண்டுமணி அளவுக்குக்கூடத் தங்கம் இல்லை! அந்தக் குழந்தைகள் சிரிக்கும்போது, தெரியும் பல் வரிசைதான் அவர்களுக்கு முத்தாரம்! இந்த அளவிலே, நம்முடைய தாய்மார்கள் இருக்கிறார்கள்! நமக்கு இருக்க இடம் இல்லை; இரண்டுவேளை வயிறாரச் சாப்பிடுவதற்கு உணவு இல்லை; இந்த நிலையில் இருப்பதற்கு, இவர்கள், யாருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? இவர்கள் எந்தத் தெய்வத்தைக் கும்பிடாமல் இருந்தார்கள்? சுவரில் சினிமாப் படம் ஒட்டியிருந்