பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அறிஞர் அண்ணா தால்கூட, அதையும், 'கடவுள்' என்று நம்பிக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுபவர்கள் இந்த 1960-லும் இருக்கிறார்கள்! - இருந்தும், உழைக்காமல் இருக்கிறார்களா என்றால், இல்லையே! இப்படிப்பட்ட உழைப்பாளர் கூட்டம் நம்முடைய நாட்டிலே ஒரு வேளைச் சோற்றுக்கு திண்டாடிக் கொண்டிருக்கிறது! -14--4--60-ல் நடைபெற்ற கழகக் கூட்டத்தில் அண்ணா ஆற்றிய உரை மனத் திருப்தி எத்தொழிலில் ஈடுபட்டவர்களுக்கும் மனத் திருப்தி இருக்கவேண்டும்; அது இப்பொழுது நமது நாட்டிலுள்ள அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு இல்லை; குறிப்பாக, ரெவினியூ இலாகாவை எடுத்துக் கொண்டால், அங்கு ஒரு தாசில்தார் இருப்பார்; அவரைப் பார்ப்பதற்கு ஒரு கிராம முன்சீப் வருவார்; ஆனால், அவருக்கு உட்காருவதற்குக்கூட நாற்காலி கொடுக்காமல்-அவரைப் பேசவும் விடாமல்-சற்றுக் கோபமாகவே பேசித் திருப்பி அனுப்பிவிடுவார் ! இது போன்ற நிலைமை, இந்த சனநாயக ட்சியில் இருக்கிறது! நான் அதிகாரிகளைக் குறை சொல்லுகிறேன் என்று எண்ணவேண்டாம்; அவர்கள் மனத் திருப்தியில்லாமல் வேலை செய்கிறார்கள்; 'மக்களுக்காக நாம் பணியாற்று கிறோம் என்ற எண்ணம் அவர்களிடத்தில் இல்லை! ஆகவேதான், அவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள்!” அஞ்சல் ஊழியர் கூட்டத்தில்; அண்ணா 15-3-60. படித்தவர்கள் பட்டாளம்! "பாட்டாளி மக்கள் உழைத்துப் பிழைக்கின்றவர்கள் - தொழிலாளத் தோழர்கள் அன்றாடங் காய்ச்சிகள் - அன்னப்பாலை அமுதென உண்கிறவர்கள் மட்டும்தான் கழகத்தின் பக்கம்” என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள்