பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 107 - கோவைக்கு வந்திருந்தால், படித்தவர்கள் பட்டாளம் பண்பாளர் திருக்கூட்டம் கழகத்தின் பக்கத்தில் அணிதிரண்டு நிற்கும் காட்சியைக் கண்டிருக்கலாம்." -கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஆற்றிய ஆங்கில உரையில் மனமிருந்தால் மார்க்கம் ஏற்படாதா? "ஏழை எளிய பாட்டாளிகள், வேலை செய்யும் இடங்களிலேயே குடியிருந்தால்தான் வசதியாக இருக்கும்; கோடம்பாக்கத்தில் குடியிருந்து கொண்டு, கொத்தவால் சாவடியில் மூட்டை தூக்கியோ - வண்டி இழுத்தோ, ஒரு ரூபாய் - எட்டணா கூலி பெறும் ஏழை எப்படி வீட்டுக்கும் வேலை செய்யும் இடத்துக்கும் போய்வர முடியும்? - தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழில் செய்யுமிடங்களிலேயே பல அடுக்குக் கட்டடங்கள் கட்டி அளிக்கலாம்; இப்படிப்பட்ட குடியிருப்பு விடுதிகளைக் கட்ட அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அளவு பணமும் தொழிலதிபர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணமும் போடலாம். - தொழிலதிபர்கள் பணம் போடுவதால் அவர்களுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை; தொழிலாளர் நிம்மதியாக வாழ்ந்தால், தொழிலும் இலாபகரமாக நடைபெறும். தொழில் நல்ல முறையில் நடக்கிறது என்றால், தொழிலதிபர்கள் பணம் போடுவதில் தடை என்ன இருக்க முடியும்? பம்பாய் - கல்கத்தா போன்ற பெரிய நகரங்களில், மாடிக் கட்டடங்களில் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்; வீடு கட்ட நிலமில்லை சொல்லுவதில் பொருளில்லை. மில்லை' " என்று வானத்தில் எட்டியமட்டும் சொந்தமிருக்கிறது; எனவே, இருக்கின்ற நிலத்தில் வானமளாவிய மாடிக்