பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அறிஞர் அண்ணா மட்டுமே திரட்டப்பட்ட நிதி வசதிகளாக இருத்தல் வேண்டும். தொழிற்சங்க வருவாய்க்கு மற்ற வழிகளில் நிதி திரட்டுவது, தொழிற்சங்க சுதந்திரத்தின் ஆணிவேரை வெட்டுவதாக அமையும். பலவீனத்திற்குக் காரணம் தொழிற் சங்கங்களின் பலவீனத்திற்குப் போதுமான நிதிவசதி இன்மையே அடிப்படைக் காரணமாகும். நமது நாட்டில் சந்தாத்தொகை மிகவும் குறைந்த அளவாக உள்ளது. உறுப்பினர்கள் அதையும் ஒழுங்காகச் செலுத்துவதில்லை. அதன் காரணமாகவே, முறையான அலுவலகங்களையோ முழுநேர ஊழியர்களையோ வைத்துக் கொள்ள வழியின்றி, ஆற்ற வேண்டிய பணிகளை முறையாகச் செய்ய முடியாமற் போய் விடுகிறது. அந்த நாடுகளில் தொழில்வளம் பெருகிய நாடுகளை சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பியபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்த நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் உள்ள வேறுபாட்டினை அவருக்கேயுள்ள பாணியில்: - அந்த நாடுகளில், 'நேரம் போதவில்லை' என்கிறார்கள்; ஆனால் இங்கோ, 'நேரம் போகவில்லை' என்கின்ற நிலை உள்ளது. நாமும் 'உழைப்பதற்கு நேரமே போதவில்லை' என்று ஆயாசப்படும் நிலையில், உழைப்பாளி மக்கள் அனைவரின் உழைப்புச் சக்தியும் ஒரு சேரப் பயன்படுத்தப்படுமானால், நாட்டுப் பொருளாதாரம் நிச்சயம் எதிர்பார்க்கின்றபடியே பெருகும் என்பதில் சந்தேகமில்லை. - $5 'அனைவரும் முழுவேலைவாய்ப்பும் பெற்று அதன் மூலம் சுய வளர்ச்சி பெற்று நாட்டுப்