பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 111 பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொருவரையும் பங்கு பெறுமாறு செய்வது மிக மிக அவசியமானதாகும்." உழைப்பவனின் உதிரம் உ உழைப்போனின் உதிரத்தை உண்டு உருசி கண்டவனும், ஒரு கணம் உள்ளமதில் உண்மைக்கு இடமளித்து, 'பெற்றோம் நாம் பெருஞ்செல்வம், மற்றெதனால் அவர் உழைப்பதனால்; உழைத்தோர் உருக்குலைந்தார் - உண்ட நாம் பெருத்து விட்டோம்; என்றும் இந்நிலைதான்' என்று இறுமாந்து இருந்திடுதல் இனியும் நடவாது; குன்றெடுக்கும் நெடுந்தோள்கள் குலுக்குவது கண்டிட்டோம்; ஆட்காட்டி விரலுக்கு அடங்கினார், 'ஏன்' என்று அழுத்தமும், திருத்தமும் அழகு பெறக் கேட்டெழுந்தார்; ஆர்த்தெழுந்து அவர் உரிமைக் காக ஆணையிட்டுக் காட்டு முன்னம், அவா அடக்கி 'அவரவர் உழைப்புக்கு அவரவரே உரிமையாளர் என்றுள்ள அறநெறிக்கு அடிபணிவோம் பிணியாகோம்' என்று தனக்குத்தானே தத்துவம் கூறிக்கொள்ளும் புத்தறிவு பூத்திட மெத்தவும் உதவும் மேலான நாள்! = பேரறிஞர் அண்ணா -1957 'திராவிட நாடு பொங்கல் மலரில். 32. தொழிற் சங்கத்தில் அண்ணா ஒரு சமயம் அண்ணா அவர்கள் சென்னை இணைப்புப் பெட்டித் தொழிலகத்தில் நடந்த பொங்கல் விழாவிற்கு வருகை தந்திருந்தார்; அதுபோது அவர் பேருரையாற்றுகையில், "தொழிலாளர்களால் நடத்தப்படும் இத்தமிழர் விழாவில், தொழிலாளியாகப் பங்கு கொள்கிறேன்.' எனத் தொடங்கி மேலை நாடுகளில் 'தொழிலாளி' என்று தம்மை சொல்லிக் கொள்ள ஒவ்வொருவரும்