பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அறிஞர் அண்ணா எவ்வளவு பெருமைப்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொன்னார்கள்:- நம் இந்திய நாட்டில், பெயருக்குக் கீழே - டாக்டர், வக்கீல், எஞ்சினீயர் எனக் குறிப்பிடுவதைப் போன்று, மேலை நாடுகளில் தொழில்களை இயக்கும் தொழிலாளர் கள், தங்கள் தொழிலின் பெயரை அதாவது 'ஃபிட்டர் என்றும், 'வெல்டர்' என்றும் 'கார்பெண்டர்' என்றும் அழகாக குறிப்பிட்டுள்ளனர். எனச் சுட்டி காட்டினார்; அவர் மேலும் கூறியதாவது: - அங்கு தொழில்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தொழில் முக்கியத்துவம் பெறுவதால் - அதனைச் செய்யும் தொழிலாளர்கள் மதிக்கப்படுகின்றனர்; தொழிலாளர்கள் மதிக்கப்படுவதால் தொழிற்சாலை சுமூகமாக இயங்குகிறது. தொழிற்சாலை சுமூகமாக இயங்குவதால் தொழில் அமைதியும் தரமான பொருட்களும் உற்பத்தியாகின்றன. தரமான பொருட்கள் உற்பத்தியாவதால்-பொருள்களுக்கு நல்ல உயர்வும், மதிப்பும் ஏற்படுகிறது; பொருட்கள் விற்பனையால் பொருளாதாரம் பெருகுகிறது; பொருளாதாரம் உயருவதால் - அந்நாடு ஏற்றம் பெறுகிறது! அதுபோல் நம் இந்திய நாடும் - தமிழ் நாடும் ஏற்றம் பெற தொழிலாளர்கள் அனைவரும் 'கடமையைச் செய்து, உரிமையைப் பெறுவோம்' எனும் கொள்கைப்படி தாங்கள் செய்யும் தொழிலைச் செம்மையாகச் செய்வதுடன், அதில் நாட்டுப் பற்றும் - பாசமும் கொண்டு செய்திடல் வேண்டும்; அதுபோல் தொழிலதிபர்கள், தொழிலாளர்களை நன்கு உணர்ந்து மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். 51427