பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபிள்ளையிட்ட வெள்ளாமை, வீடுவந்து சேராது. சிறுமுள்ளுகுத்திப், பெருமலைநோகுமா? சிறுமை படுகிறதைவிட. செத்தாலுத்தமம். சிறுமையிற்கல்வி, சிலைமேலெழுத்து. சிறைக்குங்கீழ்சிறை. அதின் கீழம்பட்டன். சிறைச்சாலைக்கும் அழகில்ல, தேவடியாளுக்கும் முறையில்லை. சிறைப்பட்டாயோ, குறைபட்டாயோ? சினத்தாலறுத்த முக்கு, சிரித்தால் வருமா? சிற்றுள், எட்டுக்குச்சரி. சிற்றூரிலே. பாரிக்கூத்தா? சின்னச்சின்னப் பேச்சும், சிரித்தாற்போல் வார்த்தையும். சின்னப்பாம்பானாலும், பெரியதடி கொண்டடி. சின்னவீடாம் சிறுகதவாம், அரக்கு முத்திரையாம். வையா புரியான் கலகமிட வைத்தது வைத்தாற்போல. சின்னாரண்ணன் கோயிலிலே, சிலைபண்ணி வைத்தாற் போல. சீதேவி தன்னுடனே, செய்யதிருப்பாற் கடலில், முதேவி யேன் பிறந்தாள் முன்? சீதேவியுடன் கூட, மூதேவியும் பிறந்தாற்போல. சீதை பிறக்க, லங்கையழிய. சீயபுரத்துப்பள்ளி, செத்துங்கெடுத்தான் இருந்துங் கெடுத்தான். சீப்பெடுத்தொளித்தால், கலியாணம் நிற்குமா? சீயென்ற காட்டிலே, செந்நாய் சேருமா? சீரங்கத்திலே, உலக்கை கொடுத்தாற்போல. சீரணி கெட்டால், கோறணி. சீராளன் கலியாணத்தில், மூணுபேர்பெண்டுகள், மாரோடே மார் தள்ளது. 102