பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுத்தத்துக்கழகு, சூழவிருத்தல். சுத்தம் பார்க்கில், குற்றமில்லை. சுந்தரியும் வாக்குப்பட்டாள், பந்தலிலே தீப்பட்டது. சுப்பனுக்கு, வீரப்பன் திடம். சுப்பா சுப்பா சூத்தைக்கடி. அப்பா அப்பா நான் மாட்டேன். சுமந்த தலையும், சிம்மாடு மாய்த்திரிகிறது. சுமந்தவன் தலையிலே, சிம்மாடு. சுமந்தவன் தலையிலே, பத்து. சுமை போட்டால், பந்தலிலே காரியமென்ன? சுமையிழந்தார்க்குச், சுங்கமில்லை. சும்மா அறுக்கிறாயென்ன, சொத்தைக் களாக்காயை. சும்மா கல அரிசி சுமக்கமாட்டான், நனைந்து. முக்கலஞ் சுமப்பானா. சும்மா கிடக்கிற தாரையை, ஊதிக்கெடுத்தான். சும்மா கிடந்த லாரறிவார். வாடா திம்மா தாலாட்ட. சும்மா கிடைத்தால், எனக்கொருத்தி, எங்கப்பனுக் கொருத்தி. சும்மாயிருக்கிறவன் சூத்திலே, சுப்பலெடுத்துக் குத்து கிறது. சும்மாயிருக்கிற உடம்பால, சுண்ணாம்பைத் தடவி புண்ணாக்குவானேன்? சுயகாரிய துரந்தரன், சுவாமி காரியம் வழவழ. சுயகாரியப், புலி. சுயபுத்தி போனாலும், சொற்புத்தி வேண்டாமா? சுவரை வைத்துக்கொண்டல்லவோ, சித்திர மெழுத வேண்டும். சுவர்க்கத்திலே தோட்டியுஞ்சரி, தொண்டமானுஞ்சரி. சுவர்க்கத்திலே போகிறபோதும், கக்கத்திலே கூத்தி யாரா? சுவர்க்கத்திலேபோகிறபோதும். கக்கத்திலொரு ராட்டினமா? சுவர்க்கத்துக்குப் போனாலும், கக்கத்திலோரு பிள்காயேன்? சுருட்டுப் பாய். முரட்டுப் பெண், சுவரின் மறைவிலாரடா, சுரக்காரன் பத்தியஞ் சாப்பிடுகிறேன'. 104