பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடியும் உணர்த்திவராது, சொரணைகெட்ட மாட்டுக்கு, சூடு சொரணை அற்றவனுக்கு. நாடு நகர் பெரிதா? சூடுண்ட பூனை, அடுப்பங் கரையிற் சேராது. சூட்சத்திலே யிருக்கிறது. மோட்சம். சூத பலத்தை . சுக முகத்தினாலறி. சூதன் கொல்லையில், மாடு மேயும். சூதாடித் தோற்றவனுக்கு. சுகங்கிட்டாது. சூதுகாரன் கையும், கொள்காரன் வாயும் சும்மாயிராது. சூதுகாரன் கையை வெட்டிப்போட்டாலும், துடுப்பைக் கட்டிக் கொண்டாடுவான். சூதுகாரன், பணம், சுத்திலிருக்கிற பேரைச்சேரும். சூத்தடிச் சிரங்கும். எதிர்த்த வீட்டுக் கடனுமாகாது. சூத்திலடித்தான், பல்லு போச்சுது. சூத்திலே கட்டத் துணியில்லை, கூத்தியார் இரண்டு. சூத்துக்குத் தடுக்குப்போட்டு, சுத்திக்கொண்டு திரிகிறது. சூத்துத் துணியை, நம்புகிறதில்லை. சூத்துப் புடவையை விட்டால், மாற்றுப் புடவையில்லை. சூத்தெப்படி அலைஞ்சாலுஞ்சரி, காவடி மாத்திரம் இராமேசுரம் போய்ச் சேர்ந்தால் சரி. சூத்தைப் பார்த்தாற் றெரியாதா, சோழமண்டலத் தகவில. சூத்தையுங் கிள்ளி, தொட்டிலு மாட்டுகிறது. சூத்தை வழித்து. முக்காடு போட்டாற்போல. சூத்தொட்டினாலும், குசு நாற்றம் போகிறதில்லை. சூரனுக்குத் துரும்பு. துரைமக்கள். சூரியனுக்கு முன், மின்னாம் பூச்சிபோல. சூரியனைக் கண்ட, தாமரை போல. சூரியனைக் கண்ட, பனிப்போல. சூரியனைக் கல்லாலடித்தது போல. சூரியக்னப் பார்த்து. நாய் குலைத்தாற்போல. சூரியன் தந்த வக்கினியைக் கொண்டு, சூரியனைப்பணிவது போல. சூரியன் முன்னே, சூழ்ந்த விருள்போல. சூரியன் முனினே, தோன்றிய சந்திரனிபோல. 105