பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொய்யரிசி, கொதி பொறுக்குமா? நொருவை தின்றால், நூறுவயது. நோ நோகாமடித்தேன். ஓயாமலழுதாள். நோயற்றவாழ்வே வாழ்வு, குறைவற்றசெல்வமே செல்வம். நோயாளி, தலைமாட்டில், பரியாரியிருந் தழுதாற்போல. நோயாளி விதியாளியானால், பரியாரி புரட்டனாவான். பகடிக்கப் பத்து பணங் கொடுப்பார், திருப்பாட்டுக் கொரு காசுங் கொடார். பகடியைப், பாம்பு கடித்தாற்போல. பகலிற் பசுமாடு தெரியாதவனுக்கு, இரவில் எருமை மாடு தெரியுமா? பகலில் பக்கம்பார்த்து பேசு. இரவில் அதுதானும் பேசாதே. பகுத்தறிவில்லாத துணிவு, பாரமில்லாத சுப்பல். பகைவருறவு, பகையெழு நெருப்பு. பக்கச்சொல். பதினாயிரம். பங்காளி குடி கெடுக்க, வெங்காயக்குழி போடச் சொன் னது போல. பங்காளியையும் பனங்காயையும், பதம்பார்த்து வெட்ட வேண்டும். பங்கில்லாப்பங்கு, விழுந்தள்ளலாமா? பங்குனியென்று பருப்பதுமில்லை, சித்திரையென்று சிறப்பதுமில்லை. பசிக்குப் பனம்பழத்தைத்தின்மூல், பித்தம் பட்டத்தைப் படுது. பசி தீர்ந்ததானால், பாட்டின்பமாம். பசித்த பறையனும். குளித்தசைவனும். சாப்பிடாதிரான். பசித்தவனுக்கு, பாலமுதமிட்டாற்போல. பசித்தவன் தின்னததுமில்ல, பகைத்தவன் சொல்லாதது மில்ல . பசித்தவன், பயறைவிதை . 138