பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதும். பா பனிச்சலம்போக்கியவான். தேய்ந்தாற் பசித்தவன், பழங்கணக்கைப் பார்த்தாற்போல. பசித்தாற் பொழுதுபோம். பாலுடனே அன்னம் பொசித்தாற் பொழுதுபோம். பசித்து வாடுவோர் கையிலே, பரிந்தமுர்த மீந்தாற்போல. பசியாமல் வரந்தருகிறேன், பழங்கஞ்சியிருந்தால் வாரு. பசியாவரம் படைத்த, தேவர் போல. பசியில்லாதவனுக்கு கருப்பு, மயிர் மாத்திரம். பசியுற்ற நேரத்திலில்லாத பால்பழம், பசியற்ற நேரத்திலேன் பசியுள்ளவன், ருசியறியான். பசியைப்பக்காரனம், புளியேப்பக்காரனும். கூட்டுப்பயி ரிட்டது போல. பசி ருசியறியுமா. நித்திரை சுகமறியுமா? பசிவந்திடில், பத்தும் பறந்து போம். பசுகிழமானாலும், பாலின்சுவை போகுமா? பசு குசுவினாற்போல. பசுமரத்தில் தைத்த. ஆணிபோல. பக் சாதும், பார்ப்பான் சாதுமுண்டா? பசும்புல் நுனி, பனிச்சலம்போல. பசும்புல்லுத் தேய, நடவாத பாக்கியவான். பசுவும் பசுவும் பாய்ச்சலுக்கு நிற்க, நடுப்புல் தேய்ந்தாற்போல பசுவும், புலியும், பரிந்தொரு துறை நீருண்கிறது . பசுவுழுதாலும், பயிரைத் தின்னவொட்டார். பசுவைக்கொன்று, செருப்பு தானஞ்செய்தாற்போல. பச்சைக் கொடுத்தால் பாவந்தீரும். வெள்ளை கொடுத்தால் வினை தீரும். பச்சை சிரிப்பு பல்லுக்காகாது. தூமப்பருக்கை வயிற் றுக்காகாது. பச்சைப் பாண்டத்தில், பாலை வைத்தால், பாலு முதவாது பாண்டமு முதவாது. பச்சை மட்டைக்குப் போனவன். பதினெட்டாந் துக்கத்திற்க வந்தாற்போல. பச்சை மண்ணும், சுட்டமண்ணு மொட்டுமா? பஞ்சத்திலே, பிள்ளை விற்றாற்போல. பஞ்சமில்லாக் காலத்தில், பசி பறக்கும். பஞ்சாங்கம் கெட்டுப்போனால், நவக்கிரகமும் கெட்டுப் போமா? பஞ்சாங்கம் பலசாஸ்திரம். கஞ்சி குடித்தால் கலமுத்திரம். பஞ்சானும் குஞ்சம். பறக்கத்தவிக்கிறது. 139)