பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சுபடிந்த பழஞ்சித்திரம்போல. பஞ்சு பறந்தாலும் படியுமொருதேசம், நெஞ்சு பறப்பதற்கு நிலை காணோம் லவலேசம். பஞ்சுப்பொதியில், நெருப்பு பட்டாற்போல. பஞ்சுப்பொதியிற்பட்ட, அம்புபோல். படிக்கமுடைத்துத் திருவுருக்கொண்டால், பணிந்துப் பணிந்து தான் கும்பிடவேணும். படிக்கரசனிருந்தால், குடிக்குச் சேதமில்லை. படிக்குப் பாதி தேமுதா? படிக்கிறது திருவாய்மொழி, இடிக்கிறது பெருமான் கோயில். படிக்கிறது திருவாசகம், இடிக்கிறது ஈச்சுரன் கோயில். படியாள்வார் நீதிதப்பிற். குடியாரிருப்பார் குவலையத்தில், படுகளத்தில், ஒப்பாரியா? படுக்கப்பாயுங் கொடுக்கான். தூங்க இடமுங்கொடுக்கான். படுக்கைச்சுகம், மெத்தையறியாது. படுதீப்பட்டு வேகிறவீட்டிலே. படுத்துக்கொள்ள இடங் கேட்டானாம். படுத்தால் பசி, பாயோடே போய்விடும். படுவது பட்டும். பட்டத்துக் கிருக்கவேண்டும். படைக்கு மொருவன், குடைக்கு மொருவன். படைச்சாலுக் கொருபணமிருந்தால், பயிரிடாதவன் பாவி. படைமிகுந்தா லரணில்லை. படைமுகத்தில், அறிமுகம் வேண்டும். படையாது படைத்த மருமகளே உன்னை, பறையனறுக்கக் கனாக்கண்டேன். பட்சி, சிறகு பறி கொடுத்தாற்போல. பட்சித்தாலும் பட்சி, இரட்சித்தாலும் இரட்சி, பட்டகாலிலே படும். கெட்ட குடியே கெடும். பட்டடை வாய்த்தால், பணி வாய்க்கும். பட்டணத்தாள் பெற்றகுட்டி, பணம்பறிக்க வல்ல குட்டி. பட்டணத்தை, படல்கட்டி சாத்தலாமா? பட்டதும் கெட்டதும், பாய்முடைந்து விற்றதும். ஓலை கிடையா மல் உட்கார்ந்திருந்ததும். பட்டப்பகலிலே. நட்சத்திரம் கண்டாற்போல. பட்டப்பகல் போலே நிலவெறிக்க, குட்டிச்சுவரிலே முட்டிக்கொள்ள வெள்ளெழுத்தா. 140