பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டப்பகல் விளக்கு, பாழடைந்தாற்போல. பட்டவர்க்குண்டு, பலன். பட்டவனுக்குத் தெரியும், படையிற் கலக்கம். பட்டால் பலனுண்டு. பட்டால், பாழ்போமா? பட்டி மாட்டிற்கு, கட்டை கட்டினாற்போல. பட்டி மாட்டுக்கு. சூடுபோட்டாற்போல. பட்டு கத்தரித்தாற்போல. பட்டு சுத்தரித்தது போலப் பேசவேண்டும். பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லுகிறாய். பட்டு நூலுக்குள்ள. சிக்கெல்லா மிருக்குது. பட்டு நூல், தலைகெட்டாற்போல. பட்டுப்புடவை இரவல் கொடுத்ததுமல்லாமல், பாயுந் தூக்கிக் கொண்டு அலையவேண்டியதாச்சுது. பட்டுப்புடவையில், ஊசித்தட்டுருவிப் பாய்ந்தாற்போல. பட்டு மக்கினால், பெட்டியிலே. பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும். காற்காசு கந்தை ஓடியுலாவும். பட்டும் பாழு, நட்டுஞ்சாவி. பணக்கள்ளி, பாயிற்படாள். பணக்காரன் பின்னும் பத்து பேர், பயித்தியக்காரன் பின்னும் பத்து பேர். பணத்துக்கொரு அம்பு கொண்டு, பாழிலெய்தாற்போல. பணத்தைப் பார்க்கிறதா, பழமையைப் பார்க்கிறதா? பணமிருந்தால் பாட்சா, பணமில்லாவிட்டால் பக்கிரி. பணமில்லாதவன் , பிணம். பணமும் பத்தாயிருக்கவேணும், பெண்ணும் முத்தா யிருக்கவேணும் பணமென்முல் பசாசாய்ப் பறக்கிறது. பணமென்றால், பிணமும் வாயைத் திறக்கும். பணமென்ன செய்யும்? பத்துவிதஞ் செய்யும். பணமென்ன பாஷாணம். குணமொன்றே போதும். பணம் பந்தியிலே, குலம் குப்பையிலே. பணம் பெரிதோ. பழமை பெரிதோ? பண்ட மோரிடத்திலே, பாவமோரிடத்திலே. பண்டாரமே குருக்களே, பறச்சிமுத்திரங் குடித்தவரே. பண்டாரம் பிண்டத்துக்கழுகிறான், லிங்கம் பால் சோற்றுக் கழுகிறது. பண்ணி, பதித்தாற்போல. பண்ணின பாவத்தை, பட்டுத் தொலைக்கவேண்டும். 141