பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணகணக்காரன் பெண்டாட்டி, பணியக்கிடந்து செத்தாளாம். பதிவிரதாபத்தினி கதைகேட்டுவந்தென், பட்டுக்கிடப்பாய் கால முடக்கு. பதமுத காரியஞ் சிதறாது. பதனம், பத்துக்கெளிது. பதினாயிரம் கொடுத்தாலும், பதைப்பாகாது. பதிவிரதைக்கு. பத்தாவே தெய்வம். பதினாறு பல்லாலே ஒருபல், பற்கறைப்பட்டது போல. பதினாறும் பெற்று, பெருவாழும் வாழ்கிறது. பதுங்குகிற புலி, பாச்சலுக் கடையாளம். பத்தரிசியும் வேகவில்லை, பாவிபிராணனும் போகவில்லை. பத்தி கொள்பவன், முத்தியுள்ளவன். பத்தியத்துக்கு முருங்கைக்காய் கொண்டு வரச்சொன்னால், பால் தெளிக்கு அகத்திக்கீரை கொண்டுவருவான். பத்தியுள்ளபூனை பரமண்டலத்துக்குப் போச்சுதாம், நெத்திலி மின் வாயிலே கவ்விக்கொண்டு. பத்தியோடே பாவக்காய், சட்டியோடே தீயுது. பத்திலே விழுந்த பாம்பும் சாகாது. பத்தினியைத் தொட்டதும், துரியோதனன் பட்டதும். பத்துவயதிலே, பாலனப்பெறு. பத்தேர் வைத்துப் படைமரமுந்தோற்றேன். எத்தனையேர் வைத் துக் கோவணமுத்தோற்றம்? பத்தோடே பதினொன்று. அத்தோடே இதொன்று. பந்தடி போல் துள்ளி, பரிதவிக்கிறது. பந்திக்கு முந்தவேண்டும், படைக்குப் பிந்தவேண்டும். பந்திக்கில்லாத வாழைக்காய், பந்தலிலே கட்டித் தொங்கு தாம். பந்தியிலே வேண்டாமென்றால், இலை பொத்தலென் கிறாய். பயறுபயறென்றபிள்ளை, பசறுபசறென் கிறது. பயித்தியந் தெனிந்தது. உலக்கையெடுத்தா காது குத்த. பயித்தியமோ பட்டாரமே என்றால், இப்போதுதான் தொடரு கிற தென்முன். பயித்தியம் பிடித்து, பாயைப் புரண்டுகிறது. பரணியிலே பிறந்தால், தரணியாளலாம். பரம்பரை ஆண்டியோ, பஞ்சத்துக்காண்டியோ?