பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிகாரியுறவு. தெருவாசல் மட்டும். பரிக்கிடுங் கடிவாளத்தை, நரிக்கிடுகிறதா? பரிசத்துக்கு லோபி, இழிகண்ணியைக் கொண்டானாம். பரிகாசப்பட்டனை, பாம்பு கடித்தாற்போல. பரிகாரம் வேணும். ஒன்று அதிகாரம் வேணும். பருத்திக்கு உழுமுன்னே, தம்பிக் கெட்டுமுழம். பருத்தி பட்ட பாடெல்லாம் படுகிறது. பருத்தி, புடவையாய்க் காய்த்தாற்போல. பருத்தி பொதிக்கொரு. நெருப்புப் பொறிபோல. பருப்பிலே. நெய்விட்டது போல. பலசரக்குசசெட்டி. பயித்தியங்கொண்டது போல பலதிட்டுக்கொரு முழுக்கு. பலத்தவன் கைக்கு, இளைத்தவன் துரும்பு. பலநாளத்திருடன், ஒருநாகாக் ககப்படுவான். பலநாகாவெய்யி லொறுத்தாலும், ஒரு நாளைவெய்யி லொறுக்காது. பலந்தேடப்போய், பழிவந்து நேர்ந்தது போல, பலபிச்சை, ஆறாய்ப் பெருகும். பலமுயற்சி செய்யினும், பகவன்மேற் சிந்தைவை. பலவாய்க்கால், ஆருய்ப்பெருக்கும். பல்லக்கேற யோகமுண்டு, உன்னியேறச் சீவனில்லை, பல்லாட, பசியாறும். பல்லு போனால், சொல்லு போச்சுது. பல்லைக்காட்டி, பரிதவிக்கிறது. பல்லைக்குற்றி முகந்துபார்த்தால், தெரியும் நாற்றம். பவுசுகெட்ட பாக்கட்டிக்கு, இரண்டு பக்கமுந் தீவட்டியாம். பழகப்பழக, பாலும் புளிக்கும். பழங்கால், தூர்க்கவேண்டாம். புதுக்கால் வெட்ட வேண்டாம். பழமை பாராட்டவேணும். பழம் நழுவிப், பாலில் விழுந்தது போல. பழம் புண்ணாளி. பரியாரி. பழிக்கஞ்சாதவன், கொலைக்கஞ்சுவானா? பழிக்கஞ்சு, பாபத்துக்குக் கெஞ்சு. பழிக்கானோர் சிலர். பழிக்கப்படுவோர் சிலர். பழிப்பான கல்வி, பாபத்தின் ஊற்று. 143