பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழியொரு விடத்திலே, பாபமொரு விடத்திலே. பழுதுசெய்ததை அறிக்கையிடில், பாதி நிவர்த்தி. பழுதை, பாம்பாய்த் தோன்றினதுபோல. பழுதையென்று கிடக்கப்படவுமில்லை. பாம்பென்று நினைக்கப் படவுமில்லை . பழுத்த பழம், கொம்பிலே நிற்குமா? பழுத்த ஓலையைப்பார்த்து. குருத்தோலை சிரிக்கிறதாம். பழைய குருடி. கதவைத்திறடி. பழையது மீந்தவிடம். காணியாட்சி. பழைய பகையையெண்ணி, பழமுள்ளுக் கிளையாதே . பழையபொன்னனேபொன்னன், பழையகப்பரையே கப்பரை பழையனூர் நீலி, பரிதவித்தழுகிறாற்போல. பள்ளத்திலிறங்கினால் பெண்டாட்டி, மேட்டிலேறினால் தாயா? பள்ளயிறைத்தவன், பங்குகொண்டு போகிறான். பள்ளமுள்ள விடத்திலே தண்ணீர் நிற்கும், பாபமுள்ள விடத்தலே பழிபோம். பள்ளமேடில்லாமல், பருத்தி விரைக்கிறது. பள்ளிக்கணக்கு, புள்ளிக்குதவாது. பள்ளிக் குப்பத்துக்கு, அம்பட்ட வாத்தியார். பள்ளிக்கும் இரும்புக்கும். பதம்பார்த்தடி. பள்ளிப் பாக்குத்தின்றால், பத்துவிரலுஞ் சுண்ணாம்பு. பள்ளிப் பிள்ளைக்கு, பகுத்தறிவேது. பள்ளிப் பின் காயென்றால், செல்வங் குறையுமா? பள்ளிமச்சான கதைபோல. பள்ளியையும் பனங்காயையும். பதம்பார்த் தடிக்கவேண்டும். பள்ளி யொளித்திரான். பார்ப்பான் குளித்திரான். பறக்கிற பட்சிக்கு, சிறகொடிந்தாற்போல. பறக்கிற பட்சிக்கு, இருக்கிற கொம்பு நிலவரமா? பறக்குங்காகம். இருக்குங்கொம்பறியாதா? பறங்கிக்காய் அழுகலைப் பசுவிற்றுப் போடுசுவுந் தின்னா விடில் பார்ப்பானுக்குக் கொடு. 144)