பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலியவந்தால், கிரந்திக்காரி. வலியவனுக்கிடங்கொடுத்தால், வயற்றுவலிக்கிடங் கொடுக்கிறது போல. வலியவனெடுத்தது வலி. வலியவன் கிட்டே. வழக்குண்டா ? வலியவுறவாடி வாசலிலே வந்தாலும், பொய்யுறவாடி போய்வா வென்று சொல்லுகிறாள். வலைக்குள்ளகப்பட்ட, மான் போல. வல்லவனாடிய பம்பரம், மணலிலுமாடும். வல்லவனுக்குப் புல்லாயுதம். வல்லவனுக், கெல்லாமுண்டு. வல்லவன் போனது. வழி. வல்விலைக் கூறையும். மெல்விலைக் காளையுமாகாது. வவ்வால் வீட்டுக்கு வவ்வால் வந்தால், நீயுந்தொங்கு நானுந் தொங்கு. வவ்விடக், கவ்வாச்சுது. வவ்வுதல், செவ்வியைக் கெடுக்கும். வழக்கு தீர்க்கிறதில், மரியாதை ராமன்தான். வழவழத்த உறவைப்பார்க்கிலும், வயிரம்பற்றிய பகைநன்று. வழிநடை வார்த்தை, வாகனம்போல் வழியாச்சுது காரியம், வெளியாச்சுது. வழியிலேகண்ட குதிரைக்கு வைக்கல்பழுதை கடிவாளம். வழியிலே கிடக்கிற கோடாலியை யெடுத்து. காலின் மேற் போட்டுக் கொள்வானேன். வழியுமில்லை. வாய்க்காலுமில்ல வழியே போய் வழியேவந்தால், அதிகாரி செங்கோ லென்ன செய்யும். வழிவழியாய்ப் போகும்போது. விதிவிதியாய் வருகிறது. வளருங்காய் பிஞ்சிலேதெரியும், விளையும்பயிர் முளையிலே தெரியும். வளர்த்த கிடா. மார்பிலே பாய்ந்தது போல. வளர்த்தி, வாக்கப்படுத்து கிறது. வளர்ந்தவுயரத்தை. வாசற்படியிலே காட்டுகிறதா? 178