பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயல்முயற்சியிற். முனியமுண்டா ? வயித்தியன், தலைமாட்டிலிருந் தழுதது போல. வயிராக்கியத்திற்கு, அம்பட்டன் கத்தியை விழுங்குகிறதா? வயிறாரப்போசானமும், அரையாரப்புடவையு மில்லை. வயிறுநிறம்பினால், பானை முடாள். வயித்திலே, பாலவார்த்தாற்போல வயிற்றுக்குடலைக் காட்டினாலும், வாழைநாரென் கிறான். வயிற்றுக்குத் தண்ணியும், இடுப்புக்குத் துணியுமில்லை. வயிற்றுப்பிள்ளையை நம்பி, மாடுமேய்க்கிறபிள்ளையைப் பறி கொடுத்தாற்போல. வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும், கண்கட்டி வித்தை யென் பார். வயிறுபசித்தால், வைத்தவிடத்தைப்பாரு. வயிற்றைப்பிடித்து நிழலிலிருந்தால், மலடிக்கு மசக்கை, வரச்சே தூண்டிறகயத்தின் வழியாய் வந்தது. போகச்சே இருப்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு போயிற்று. வரப்புயர்ந்தால் நீருயரும், நீருயர்ந்தால், நெல்லுயரும், நெல்லுயுர்ந்தால் குடி உயரும். குடியுயர்ந்தால், முடியுயரும். வரப்போ தலைக்காணி, வாய்க்காலோ பஞ்சுமெத்தை. வரவரக் கண்டறி, மனமே. வரவரமாமியார், கழுதைபோலானாள். வரவிலேயா, சிலவிலேயா. வரவு கொஞ்சம் . வலிப்பு மெத்த. வரவுக்குத் தகுந்த சிலவு. மாப்பிள்ளைக்குத் தகுந்த மஞ்சள், வரி விழுந்த புலியைப் பார்த்து, நரியும் கொள்ளிக்கட்டை யெடுத்துச்சுட்டுக்கொண்டுதாம். வருங்காரியஞ் சொல்லுங்கெவுளி, வலிய கழுநீர்ப்பானையில் விழுந்தாற் போல. வருந்தியழைத்தாலும் வாராது வாராது. வருந்தினால், வராததொன்றில்லை. வரும் விதிவந்தால், படும் விதிபடவேணும். வலிமைக்கு. வழக்கில்லை. வலியச்சண்டைக்குப் போகாதே. வந்தசாம்டையை விடாதே. வலியப் பெண்கொடுக்கிறோமென்றால், குலமென்ன கோத்திர மென்ன வென்பார்கள்? வலியவந்த சீதேவியைக், காலாலுதைத்துத் தள்ளலாமா? 177