பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்ந்தமகள் வந்தால் வானத்தடுக்கிடு, கெட்டமகள் வந்தால் கிழிஞ்சதடுக்கிடு. வாழ்ந்தவன் கெட்டால், வரையோட்டுக்குமாகான் வாழ்ந்தவனை வாழ்த்தவேண்டாம். தாழ்ந்தவனை திட்ட வேண்டாம். வாழ்வார்க்குச் சீதேவி, வாயிலே. வாழ்வுவரும் போது. மதியோடி வரும். வாளுக்காயிரந் தோளுக்காயிரஞ் சம்பாதித்தாலும், மட்டாய்ச் செலவிடு. வானத்திலுள்ள அம்புலியை, வாவென்றல் வருமா? வானத்தின் கீழிருந்து. மழைக்கஞ்சினாற்றீருமா? வானம் பார்க்கப்போய், இடைமடஞ்சலா? வானம் வழங்க, தானம் வழங்கும். வான் குருவிக் கூடும். வங்கரையான் புத்தும். தேன் சிலந்தி இராட்டுஞ் செய்யத் தெரிவதரிது. விசுவாசக்காரனுக்கு வென்னீரும் பருக்கையும், தாட்டோட்டக் காரனுக்குத் தயிரும் சோறும். விசுவாசக்கொக்கு. நடமாடிச் செத்ததாம். விசுவாசப்பூனை, கருவாட்டைத் தூக்கிக்கொண்டு போகிறதாம். விடிந்தாற்றெரியும் மாப்பிள்ளைக்குருடும். பெண்குருடும். விடியற்காலங் கலியாணம், பிடியடா தாம்பூலம். விடியாமுஞ்சிக்கி வேலையகப்பட்டாலும், கூலியகப்படாது. விடியவிடியக் கதை கேட்டும். இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்கிறது போல விடியுமட்டு மழைபெய்தாலும், ஒட்டாங்கிளிஞ்சில் கரையுமா? விடியுமட்டுமிறைத்தவனும், விடிந்தபின் சாலையுடைத் தவனுஞ்சரி. விடுவிடுசங்கிலி, வேப்பஞ்சங்கிலி, விட்டால் குடி கெட்டுப்போம். விட்டகுறை தொட்ட குறை, விடுமா? விட்டு அலைகிறதுலுத், தொட்டு அலை. விட்டுச்சொன்னால் கட்டுக்குலையும், விரித்துடுத்தினால் அழுக் குப்படும். விதவை கற்பமானால், வெளியிலே சொல்லாள். விதித்த விதியைவிட, வேறேநடக்குமா? விதியின் பயனே பயன். 182